குறைந்த பஸ் கட்டணம் 15 ரூபாவாக அதிகரிக்கப்படும்- தனியார் பஸ் சம்மேளனம்

1042 0

எந்த அச்சுறுத்தல்கள் வந்தாலும் நல்ல வழியிலோ, மாற்று வழியிலோ தனியார் பஸ் கட்டணங்களை  10 வீதத்தினால் அதிகரிப்பதாக அகில இலங்கை தனியார் பஸ் சங்கங்களின் சம்மேளனம் அறிவித்துள்ளது.

அரசாங்கம் எரிபொருள் விலையை அதிகரித்துள்ள நிலையில் பஸ் கட்டணம் அதிகரிக்கப்படுமா? என  அதன் பொதுச் செயலாளர் அஞ்ஜன பிரியன்ஜீத்திடம் வினவியதற்கே அவர் இதனைக் கூறியுள்ளார்.

கடந்த இரு மாதங்களுக்குள் எரிபொருள் விலை 14 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளது. இதனால், எதிர்வரும் மூன்று நாட்களுக்குள் பஸ் கட்டணத்தை அதிகரிக்கவுள்ளோம். 12 ரூபாவாகவுள்ள குறைந்த பஸ் கட்டணத்தை 15 ரூபாவாக அதிகரிக்கவுள்ளோம்.

இதனால், பயணிகளுக்கு ஏற்படும் அசௌகரியத்துக்கு அரசாங்கம் தான் பொறுப்புச் சொல்ல வேண்டும். ஏனெனில், அரசாங்கம் நினைத்த நினைத்தவாறு எரிபொருள் விலையை அதிகரிக்கும் போது தனியார் பஸ் உரிமையாளர்கள் தங்களது தொழில்துறையை முன்னெடுத்துச் செல்ல முடியாதுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

Leave a comment