சுமந்திரன் மற்றும் த.தே கூட்டமைப்பை விமர்சித்து முல்லைத்தீவில் துண்டுப்பிரசுரம்

221 0

தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரனை விமர்சித்தும், தமிழ் தேசியகூட்டமைப்பின் செயற்பாடுகளை விமர்சித்தும் முல்லைத்தீவு நகரில் பரவலாக துண்டுப்பிரசுரங்கள் ஒட்டப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

“இது தமிழ் தலைவர்கள் எனப்படுவோர் ஐக்கியப்படவேண்டிய நேரம் “எனும் தலைப்பில், தமிழர் தாயகத்தில் கையளிக்கப்பட்டுக் கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளைத் தேடி கண்டறியும் சங்கம் எனும் அமைப்பின் பெயரை தாங்கிக் குறித்த சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன.

குறித்த சுவரொட்டியில் ‘முதலில் நாம் ஒரு தமிழ் தலைவரைத் தேர்ந்தெடுக்கவேண்டும் ,நாம் ஒரு இணைப்பை அல்லது கூட்டணியை உருவாக்க வேண்டும் . சிங்களவர்களால் ஏமாற்றப்பட்ட அரசியல்வாதிகள் ,தமிழர்களை ஏமாற்றும் அரசியல் வாதிகள் சிங்கள முகவர்கள் அனைவரும் ஓய்வு பெறவேண்டும்.

நமது அரசியல் தீர்வு அமேரிக்கா ,ஐரோப்பிய ஒன்றியம் ,இந்தியா மட்டும் தான் தீர்வு காணமுடியும் என நம்பும் தமிழர்கள் மட்டும் இந்த இணைப்பில் சேரவேண்டும். எனக் குறிப்பிடப்பட்டுள்ளதோடு பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரனையும் கடுமையாக விமர்சித்துள்ளது.

சுமந்திரன் தமிழர்களை பிரதிநிதித்துவப்படுத்தக்கூடாது, த. தே. கூட் டமைப்பின் பேச்சாளர் பதவியையும் இராஜினாமா செய்ய வேண்டும்.

சுமந்திரன் தமிழ் மக்களுக்குச் சமஷ்டி தேவையில்லை என்று காலி நகரில் சிங்களவரிடம் கூறினார். யார் இவருக்கு இந்த உரிமையைக் கொடுத்தது. தமிழினத்தைத் தொடர்ந்தும் சிங்களவருக்கு இரை யாக்கும் சுமந்திரனே தமிழ் அரசியலிருந்து வெளியேறு. போன்ற கடுமையான வாசகங்கள் குறித்த சுவரொட்டியில் காணப்படுகின்றன.

Leave a comment