யாழில் கைக்குண்டு மீட்பு

36 0

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள பரமேஸ்வரன் கோவில் வளாகத்தில் இருந்து கைக்குண்டு ஒன்று இன்று யாழ்ப்பாணம் பொலிஸாரால் மீட்க்கப்பட்டுள்ளது.

கோவில் புனரமைப்பு பணிகள் இடம்பெற்றுவரும் நிலையில் மதில்கட்டுவதற்காக அத்திபார வேலைக்காக மண்ணை வெட்டிய போது கைக்குண்டு தென்பட்டுள்ளது.

யாழ்.பல்கலைக்கழக நிர்வாகத்தினால் யாழ்ப்பாணப் பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டதை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு சென்ற பொலிஸார் விசேட அதிரடிப் படையினரின் உதவியுடன் கைக்குண்டை மீட்பதற்கான நடவடிக்கையினை மேற்கொண்டுள்ளனர்.

Leave a comment

Your email address will not be published.