மன்னார் மனித எலும்புக்கூடுகள் விவகாரம் – கை கால்கள் கட்டப்பட்ட நிலையையில் மனித எலும்புக்கூடு மீட்பு

5 0

மன்னார் ‘சதொச’ வளாகத்தில் தொடர்ச்சியாக பல்வேறு கேள்விகள் சந்தேகங்களை ஏற்படுத்த கூடிய வகையில் தொடர்சியாக மனித எலும்புக்கூடுகள் மீட்கப்பட்டு வருகின்றது.

இன்று 71 ஆவது தடவையாக அகழ்வு பணிகள் இடம் பெற்று வருகின்றது. இதுவரை 126 முழுமையான   மனித எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், அவற்றில் 120  மனித எலும்புக்கூடுகள் அப்புறப்படுத்தப்பட்டு, பொதி செய்யப்பட்டு, நீதிமன்ற கட்டடத்தொகுதியில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

மன்னார் நீதவான் ரி.சரவணராஜா மேற்பார்வையில் சட்ட வைத்திய அதிகாரி சமிந்த ராஜபக்ஷ மற்றும் களனி பல்கலைகழக போராசிரியர் தலைமையில் மன்னார் ‘சதொச’ வளாகத்தில் அடையாளப்படுத்தப்பட்டுள்ள மற்றும் புதிதாக அடையாளப் படுத்தப்படும் மனித எலும்புக்கூடுகளை அப்புறப்படுத்தும் மற்றும் ஆய்வு செய்யும் பணி இடம் தொடர்ந்தும் பெற்றுவருகின்றது.

இந்த நிலையில் நேற்று இடம் பெற்ற அகழ்வு பணியின் போது கை, கால்கள் கட்டப்பட்ட நிலையில் புதைக்கப்பட்டிருக்கலாம்? என சந்தேகத்தை ஏற்படுத்தகூடிய மனித எச்சம் ஒன்று அடையாளப்படுத்தப்பட்டுள்ளது.

கைகள் இரண்டும் நெருக்கமாக பிணைக்கப்பட்ட நிலையிலும் கால்கள் இரண்டும் ஒன்றுடன் ஒன்று குறுக்காக பிணைக்கப்பட்ட விதத்திலும் மிகவும் நெருக்கத்துக்குள் புதைக்கப்பட்ட நிலையில் காணப்பட்டது.

குறித்த மனித எலும்புக்கூடு  கை , கால்கள் கட்டப்பட்ட நிலையையில் புதைக்கப்படதா? அல்லது மத சடங்குகளின் அடிப்படையில் புதைக்கப்பட்டதா? என்பது தொடர்பாக எந்த வித ஊகிப்புக்களும் தற்போது மேற்கொள்ள முடியவில்லை.

எனினும் இது வரை மீட்கப்பட்ட மனித எலும்புக்கூடுகள்  மற்றும்   புதைக்கப்பட்ட நிலை மூலமாக குறித்த மனித உடல்கள் சாதாரண நிலையில் புதைக்கப்பட்டவை என நிச்சயம் ஏற்று கொள்ள முடியாத விடயமாக காணப்பட்டலும் இறுதிக்கட்ட பரிசோதனையின் பின்னரே  தெரிய வரும்.

Related Post

சுரவணையடியூற்றுக் கிராமத்தில் ஆரம்பப் பாடசாலை ஒன்றை அமைத்துத் தருமாறு கோரிக்கை.

Posted by - July 7, 2016 0
மட்டக்களப்பு மாவட்டம் பட்டிருப்புக் கல்வி வலயத்திற்குட்பட்ட சுரவணையடியூற்று எனும் கிராமத்தில் ஆரம்பப் பாடசாலை ஒன்றை உருவாக்கித்தருமாறு கிராம மக்கள், கோரிக்கை முன்வைக்கின்றனர். மட்டக்களப்பு மாவட்டத்தின் படுவான்கரைப்ப குதியான…

மாவீரர் துயிலுமில்லத்தினில் பிரதான சுடரினை மாவீரர் குடும்பமே ஏற்ற வேண்டும்!

Posted by - November 13, 2017 0
இம்முறை மாவீரர் துயிலுமில்லத்தினில் பிரதான சுடரினை ஒரு மாவீரரின் மனைவியோ,கணவரோ,பெற்றோரோ அல்லது பிள்ளைகள் மட்டுமே ஏற்றவேண்டுமென மாவீரர்களது குடும்பங்கள் சார்பினில் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

அமெரிக்கத் தூதரக அதிகாரிகளுக்கும் சம்பந்தனுக்கும் இடையில் நேற்று சந்திப்பு

Posted by - January 10, 2017 0
அமெரிக்கத் தூதரக அதிகாரிகளுக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனுக்கும் இடையில் நேற்று சந்திப்பு ஒன்று இடம்பெற்றுள்ளது.

ஜெனிவா மாபெரும் பேரணியில் வீதி மறியல் போராட்டத்தில் தமிழ் இளையோர்கள்

Posted by - September 27, 2016 0
தமிழின உணர்வோடு வேற்றின மக்களையும் , ஊடகங்களையும் தமிழின அழிப்பு சார்ந்து கவனத்தில் கொண்டுவர பேரணியில் இணைந்துகொண்ட இளையோர்கள் தன்னெழுச்சியாக வீதி மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். குறிகிய…

தென்னை அபிவிருத்திச் சபை,தரிசு நிலங்களை குத்தகைக்கு எடுத்து அந்நிலங்களை வளப்படுத்த முன்வர வேண்டும் – க.வி.விக்னேஸ்வரன்(காணொளி)

Posted by - December 27, 2016 0
தென்னை அபிவிருத்திச் சபை வடக்கு மாகாணத்திலுள்ள தரிசு நிலங்களை குத்தகைக்கு எடுத்து அந்நிலங்களை வளப்படுத்த முன்வர வேண்டும் என வடக்கு மாகாண முதலமைச்சர் க.வி.விக்னேஸ்வரன் கோரிக்கை விடுத்தார்.…

Leave a comment

Your email address will not be published.