அணுசக்தி வினியோக நாடுகள் குழுவில் இந்தியா இணைய சீனா எதிர்ப்பு !

12 0

அணுசக்தி வினியோக நாடுகள் குழுவில் (NSG) இந்தியா இணைய சீனா எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், இந்தியாவுக்கு முழு தகுதியும் இருப்பதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.

அணுசக்தி வினியோக நாடுகள் குழுவில் (NSG) தற்போது 48 நாடுகள் உறுப்பினர்களாக உள்ளன. இந்த குழுவில் இடம் பெற இந்தியாவும், பாகிஸ்தானும் விண்ணப்பித்துள்ளன.அணுசக்தி வினியோகக் குழுவில் இடம் பிடிப்பதன் மூலம் இந்தியாவில் அணு மின் உற்பத்தியை மேம்படுத்த முடியும்.
அது பொருளாதார வளர்ச்சிக்கு மிகவும் கை கொடுக்கும் என்பதால், அந்த குழுவில் இடம் பெற இந்தியா தீவிர முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. பிரதமர் மோடி கடந்த சில மாதங்களாக நாடு, நாடாக சென்று இதற்கு ஆதரவு திரட்டி வந்தார்.
அதன் பயனாக அமெரிக்கா, இங்கிலாந்து, பிரான்சு, ஜப்பான், அர்ஜெண்டினா, தென்கொரியா, மெக்சிகோ, சுவிட்சர்லாந்து, தென்ஆப்பிரிக்கா, ரஷியா உள்பட பல நாடுகள் ஆதரவு தெரிவித்தன. என்றாலும் ஒரு நாடு எதிர்ப்பு தெரிவித்தால் கூட, அதில் புதிய உறுப்பினரை சேர்க்க முடியாது என்பதால் எதிர்ப்பு நாடுகளின் ஆதரவைப் பெற இந்தியா தீவிர முயற்சிகளில் ஈடுபட்டது. இந்த குழுவில் உள்ள சீனா தனது வீட்டோ அதிகாரம் மூலம் இந்தியாவை சேர்க்க கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. அணு ஆயுத பரவல் ஒப்பந்தத்தில் இந்தியா கையெழுத்திடவில்லை என்பதை காரணம் காட்டி, இந்தியாவுக்கு சீனா எதிர்ப்பு காட்டி வருகிறது.
இந்த நிலையில், அணுசக்தி விநியோக குழுவில் இடம் பெற இந்தியாவுக்கு முழு தகுதி இருப்பதாகவும், சீனாவின் எதிர்ப்பால் இந்தியாவில் இடம் பெற முடியவில்லை என்று அமெரிக்கா தெரிவித்துள்ளது. மேலும், இந்தக்குழுவில் இந்தியா இடம் பெற ஆக்கப்பூர்வமாக வாதாடுவோம் என்றும் அமெரிக்கா தெரிவித்துள்ளது.

Related Post

குஜராத் கடல் பகுதியில் மீன்பிடித்த இந்திய மீனவர்கள் 18 பேர் கைது

Posted by - April 10, 2017 0
குஜராத் கடல் பகுதியில் பாகிஸ்தான் கடற்படையினர் இந்திய மீனவர்கள் 18 பேரை கைது செய்தனர். அவர்களுடைய 3 படகுகளையும் பறிமுதல் செய்தனர்.

இறக்குமதி செய்யும் பொருட்களுக்கு 20 சத வீத வரி – மெக்சிக்கோ அதிருப்தி

Posted by - January 27, 2017 0
மெக்சிக்கோவில் இருந்து இறக்குமதி செய்யும் பொருட்களுக்கு 20 சத வீத வரியினை அறவிடுவது தொடர்பான அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் திட்டத்திற்கு மெக்சிக்கோ அதிருப்தி வெளியிட்டுள்ளது. இந்த…

விரக்தியில் துப்பாக்கி சூடு – 4 பேர் பலி!

Posted by - August 27, 2018 0
அமெரிக்காவில் நடைபெற்ற விடியோ கேம் விளையாட்டு தொடரில் தோல்வியடைந்த நபர், விரக்தியில் துப்பாக்கிச்சூடு நடத்தியதில் 4 பேர் பலியானதாக தகவல் வெளியாகியுள்ளது. 

சீனாவை புரட்டியெடுத்த பெருமழை

Posted by - June 25, 2016 0
சீனாவின் ஜியாங்சூ மாகாணத்தில், பலத்த சூறைக் காற்றுடன் பெய்த மழைக்கு, 98 பேர் பலியாகினர். 800க்கும் அதிகமானோர் படுகாயம் அடைந்தனர்.சீனாவில், 10 மாகாணங்களில், கடந்த, 18ம் தேதி…

அசுத்தமான தண்ணீரை பருகும் 200 கோடி பேர்: உலக சுகாதார அமைப்பு அதிர்ச்சி தகவல்

Posted by - April 14, 2017 0
உலகத்தில் உள்ள மக்களில் சுமார் 200 கோடி பேர் அசுத்தமான தண்ணீரையே பருகி வருதாக உலக சுகாதார அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

Leave a comment

Your email address will not be published.