தர்மபுரி மாவட்டத்தில் தற்காலிக பட்டாசு கடை அமைக்க விதிமுறைகள் – கலெக்டர் மலர்விழி

1 0

தீபாவளி பண்டிகை முன்னிட்டு தற்காலிக பட்டாசு கடைகள் வைத்து வியாபாரம் செய்ய விரும்புவோர் 2008-ம் ஆண்டின் வெடிபொருட்கள் விதிகளின்படி விண்ணப்பிக்க வேண்டும் என கலெக்டர் தெரிவித்துள்ளார்.

தர்மபுரி மாவட்ட கலெக்டர் மலர்விழி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- தீபாவளி பண்டிகை வருகிற நவம்பர் மாதம் 6-ந்தேதி கொண்டாடப்பட உள்ளது. இதை முன்னிட்டு மாவட்டத்தில் தற்காலிக பட்டாசு கடைகள் வைத்து வியாபாரம் செய்ய விரும்புவோர் 2008-ம் ஆண்டின் வெடிபொருட்கள் விதிகளின்படி விண்ணப்பிக்க வேண்டும். பட்டாசு கடை வைக்கும் கட்டிடம் கல் மற்றும் தார்சு கட்டிடமாக இருக்க வேண்டும். கடையின் இருபுறமும் வழிகள் அமைக்க வேண்டும்.

மின்சார விளக்குகளை மட்டும் கடையில் பயன்படுத்த வேண்டும். தீயணைப்புத்துறை, சுகாதாரத்துறை மற்றும் காவல் துறையிடமிருந்து தடையில்லா சான்று பெற்றிருக்க வேண்டும். சம்பந்தப்பட்ட உள்ளாட்சி அமைப்புகளிடமிருந்து வரி செலுத்திய ரசீது மற்றும் கட்டிட வரைபடத்தின்-2 பிரதிகளை இணைத்து விண்ணப்பிக்க வேண்டும். வாடகை கட்டிடமாக இருந்தால் நோட்டரி வக்கீலிடம் கையொப்பத்துடன் கூடிய அசல் வாடகை ஒப்பந்த பத்திரம் மற்றும் உரிம கட்டணமாக ரூ.500 செலுத்த வேண்டும். அதற்கான அசல் சலானுடன் 3 பாஸ்போர்ட் அளவு புகைப்படங்களை இணைத்து படிவம் 5-ல் மாவட்ட வருவாய் அலுவலருக்கு விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வருகிற 30-ந்தேதி கடைசி நாளாகும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Post

ஒட்டகம் குர்பானி கொடுக்க அரசு அனுமதி தர வேண்டும்- ஜவாஹிருல்லா

Posted by - September 11, 2016 0
ஒட்டகம் குர்பானி கொடுக்க அரசு அனுமதி தர வேண்டும் என மனிதநேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா அறிக்கை விடுத்துள்ளார்.

‘181’ இலவச தொலைபேசி சேவை எடப்பாடி பழனிசாமி தொடங்கிவைத்தார்

Posted by - December 11, 2018 0
பெண்கள் பாதுகாப்புக்கான ‘181’ இலவச தொலைபேசி சேவையை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேற்று தொடங்கிவைத்தார்.

ஒக்கி புயல் பாதிப்பு: முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி குமரியில் இன்று ஆய்வு

Posted by - December 12, 2017 0
குமரி மாவட்டத்தில் ஒக்கி புயலால் ஏற்பட்ட பாதிப்புகளை நேரில் பார்வையிட முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி இன்று குமரி மாவட்டத்திற்கு வருகை தருகிறார்.

போயஸ்கார்டன் வீட்டில் எனக்கும் பங்கு உண்டு: அண்ணன் மகள் தீபா பேட்டி

Posted by - December 24, 2016 0
மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா வாழ்ந்த போயஸ்கார்டன் வீட்டில் எனக்கும் பங்கு உண்டு என்று அவரது அண்ணன் மகள் தீபா கூறியுள்ளார்.

வக்கீல்களை இடைநீக்கம் செய்ததை எதிர்த்து வழக்கு

Posted by - January 7, 2018 0
திறந்தநிலை பல்கலைக் கழகத்தில் பட்டம் பெற்ற 742 பேரை, வக்கீல் தொழிலில் இருந்து இடைநீக்கம் செய்ததை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கிற்கு பதிலளிக்கும்படி தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார்…

Leave a comment

Your email address will not be published.