விஸ்வரூபம் பெறும் குட்கா ஊழல் வழக்கு – மாதவராவிடம் 8 மணி நேர தொடர் விசாரணை

20 0

குட்கா ஊழல் வழக்கில் கைதாகி உள்ள மாதவராவிடம் சிபிஐ போலீசார் 8 மணி நேரம் தொடர் விசாரணை நடத்தியதில் ஊழல் குறித்து பல்வேறு ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. 

தடை செய்யப்பட்ட குட்கா உள்ளிட்ட போதை பொருட்களை சட்டவிரோதமாக விற்பனை செய்த வழக்கில் மாதவராவ் உள்ளிட்ட 5 பேர் கடந்த 7-ம் தேதி சிபிஐ அதிகாரிகளால் கைது செய்யப்பட்டனர். பல நூறு கோடி ரூபாய் ஊழல் நடந்திருப்பதாக சொல்லப்படும் இந்த வழக்கில், தமிழகத்தின் முக்கிய அமைச்சர்கள், அரசு அதிகாரிகள் பலருக்கும் தொடர்பு இருப்பதாக் கூறப்படுகிறது.

இந்நிலையில், கைது செய்யப்பட்ட மாதவராவுக்கு சொந்தமான சென்னை செங்குன்றத்தில் உள்ள குடோனுக்கு அவரை அழைத்துச் சென்ற சிபிஐ அதிகாரிகள் அவரிடம் தொடர்ந்து 8 மணி நேரம் விசாரணை மேற்கொண்டனர். இந்த விசாரணையில் பல்வேறு ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாகவும், அந்த ஆவணங்கள் அடிப்படையில், மாதவராவிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

மேலும், குட்கா ஊழல் தொடர்பாக, மாதவராவுக்கு சொந்தமான வங்கி கணக்குகளையும் சிபிஐ அதிகாரிகள் முடக்கியுள்ளனர்.

Leave a comment

Your email address will not be published.