பாதுகாப்பு படைகளின் பிரதானியின் விசாரணைகள் உடனடியாக ஆரம்பிக்கப்படும்

277 0

பாதுகாப்பு படைகளின் பிரதானி ரவீந்திர விஜேகுணரத்ன வெளிநாட்டு பயணத்தை நிறைவு செய்து நாட்டுக்கு திரும்பியவுடன் அவரிடம் உடனடியாக விசாரணைகளை மேற்கொள்ள தயாராக இருப்பதாக குற்றப்புலனாய்வு பிரிவினர் தெரிவித்துள்ளனர்.

கொழும்பில் 11 இளைஞர்களை கடத்தி காணாமல் செய்தமை தொடர்பிலான வழக்கு கோட்டை நீதவான் லங்கா ஜயரத்ன முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட வேளையில் குற்றப்புலனாய்வு பிரிவினர் இந்த விடயத்தை தெரிவித்துள்ளனர்.

பாதுகாப்பு படைகளின் பிரதானி நாட்டினை பிரதிநிதித்துவப்படுத்தி மெக்சிகோ நாட்டிற்கு சென்றுள்ளதாகவும் அவர் மீண்டும் நாட்டிற்கு திரும்பியவுடன் குற்றப்புலனாய்வு பிரிவிற்கு அழைக்கப்பட்டு குறித்த சம்பவம் தொடர்பில் விசாரணைகள் மேற்கொள்ளப்படும் எனவும் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை குறித்த சம்பவம் தொடர்பில் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருக்கும் நேவி சம்பத்தை எதிர்வரும் 26ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a comment