சர்வதேச அளவில் எரிபொருள் சம்பந்தமாக காணப்படுகின்ற நிலமைக்கு அமைவாக எரிபொருள் விலை அதிகரிக்கப்பட்டதாக நிதியமைச்சர் மங்கள சமரவீர கூறியுள்ளார்.
கட்டுநாயக்க விமான நிலையத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றின் பின்னர் ஊடகங்களிடம் கருத்து தெரிவிக்கும் போது அமைச்சர் இவ்வாறு கூறினார்.
சர்வதேச அளவில் எருபொருள் விலை அதிகரிக்கும் போது விலைச் சூத்திரத்திற்கு அமைவாக நாட்டிலும் எருபொருள் விலை அதிகரிக்கும் என்றும், சர்வதேசத்தில் விலை குறையும் போது அதன் பிரதிபலனையும் மக்களுக்கு வழங்குவதாக அமைச்சர் இதன்போது கூறினார்.

