அமைச்சர், டி.ஜி.பி. வீட்டில் நடந்த சோதனை தமிழகத்துக்கு அவமானம்- திருநாவுக்கரசர்

215 0

அமைச்சர் மற்றும் டி.ஜி.பி. வீட்டில் நடைபெற்ற சோதனையால் தமிழகத்துக்கு அவமானம் ஏற்பட்டுள்ளது என்று காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் தெரிவித்தார். 

தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் மதுரை விமான நிலையத்தில் நிருபர்களிடம் கூறியதாவது:-

பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து நடத்தப்பட்ட பந்த் வெற்றி என்பது மோடி அரசை தோற் கடிக்க பெற்ற வெற்றியாக நினைக்கிறேன்.

இன்றைய தேதி வரை பெட்ரோல் விலையை உயர்த்திக்கொண்டே இருக்கிறார்கள்.

பெட்ரோல் டீசல் விலை உயர்வு என்பது அதன் விலையை மட்டும் உயர்த்தியதோடு அல்லாமல் அனைத்து போக்குவரத்து மற்றும் அத்தியாவாசிய பொருட்கள் விலைகளையும் உயர்த்தும்.

அமைச்சர், டிஜி.பி போன்றவர்கள் வீட்டில் நடைபெற்றுள்ள சோதனையால் தமிழ்நாட்டிற்கு அவமானம் ஏற்பட்டுள்ளது. ராஜீவ்காந்தி கொலை வழக்கில் தொடர்புடைய 7 பேர் விடுதலை என்பது மற்ற குற்றங்களுக்கு முன் உதாரணமாகும். இவ்வாறு அவர் கூறினார்.

Leave a comment