மிருகப்பலி இடம்பெறுவதை தடைசெய்யும் அமைச்சரவை பத்திரத்துக்கு அனுமதி

223 0

இந்துக்கோவில்களில் மிருகப்பலி இடம்பெறுவதை தடைசெய்யும் அமைச்சரவை பத்திரத்துக்கு அனுமதி வழங்கியுள்ளது. எதிர்காலத்தில் கோவில்களில் மிருகப்பலி இடம்பெற்றால் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என மீள்குடியேற்றம் புனர்வாழ்வளிப்பு வடக்கு அபிவிருத்தி மற்றும் இந்துமத அலுவல்கள் அமைச்சு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்படுள்ளது.

இது தொடர்பாக அவ்வறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

இந்துக் கோவில்களில் இடம்பெறும் மிருகப்பலியை தடைசெய்யும்வகையில் மீள்குடியேற்றம் புனர்வாழ்வளிப்பு வடக்கு அபிவிருத்தி மற்றும் இந்துமத அலுவல்கள் அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன் அமைச்சரவைக்கு முன்வைத்த அமைச்சரவைப்பத்திரத்துக்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. ஜனாதிபதி மைத்திரபால சிறிசேன தலைமையில் இன்று இடம்பெற்ற அமைச்சரவை கூட்டத்திலே அனுமதி வழங்கப்பட்டிருக்கின்றது.

அமைச்சரவையின் அனுமதிக்கேற்ப எதிர்காலத்தில் எந்த இந்துக்கோவில்களிலும் மிருகப்பலி இடம்பெறக்கூடாது. அதனையும் மீறி மிருக்கபலி இடம்பெற்றால் சம்பந்தப்பட்டவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a comment