இணையத்தில் சாதாரண தர பரீட்சை மீள்திருத்தப்பட்ட பெறுபேறுகள்

353 0

கடந்த 2017 – டிசம்பர் மாதம் இடம்பெற்ற கல்விப் பொதுத்தராதரப் பத்திர சாதாரண தரப் பரீட்சைகளின் மீள்திருத்தப்பட்ட பெறுபேறுகள், இணையத்தில் வெளியிடப்பட்டுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.

இதன்பிரகாரம், நேற்றிரவு வெளியிடப்பட்ட குறித்த பெறுபேறுகளை www.doenets.lk எனும் பரீட்சைகள் திணைக்களத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளத்தில் பார்வையிடலாம் என திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளது.

இதேவேளை, உரிய பெறுபேறுகள் இவ்வாரம் சகல பாடசாலைகளுக்கும் தபால் மூலம் அனுப்பி வைப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாகவும் திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளது.

கடந்த வருடம், 2017 டிசம்பர் 12 ஆம் திகதி முதல் டிசம்பர் 21 ஆம் திகதி வரை க.பொ.த. (சா/த) பரீட்சைகள் இடம்பெற்றன.

நாடு முழுவதிலுமுள்ள 5,116 பரீட்சை நிலையங்களில் இடம்பெற்ற இப்பரீட்சையில், 6 இலட்சத்து 88 ஆயிரத்து 573 (688,573) பாடசாலை மற்றும் தனிப்பட்ட பரீட்சார்த்திகள் விண்ணப்பித்திருந்தனர்.

இதன் அடிப்படையில், பரீட்சை பெறுபேறுகள், மார்ச் மாதம் 28 ஆம் திகதி வெளியிடப்பட்டது. இந்தப் பெறுபேறுகளின் அடிப்படையில், மீள் திருத்தத்திற்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டிருந்த நிலையில், அதற்கான பெறுபேறுகளே தற்போது பரீட்சைத் திணைக்களத்தினால் வெளியிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a comment