ஜனாதிபதி, மஹிந்தவுடன் இணைந்தால் கொள்கைக்கு முரணாகிவிடும் – ஹரின் பெர்னாண்டோ

207 0

ஐக்கிய தேசிய கட்சி 2020 ஆம் ஆண்டு தனித்தே ஆட்சியமைக்கும். ஸ்ரீ லங்கா  சுதந்திர கட்சி பொது ஜன பெரமுனவுடன் ஒன்றினைந்தால் அது ஜனாதிபதியின் கொள்கைக்கும்,  தேசிய அரசாங்கத்தின் பொது கொள்கைக்கும் முரணாகும் என தொலைத்தொடர்பு மற்றும் டிஜிட்டல் உட்பட்டமைப்பு  வசதிகள் அமைச்சர்  ஹரின்  பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

ஐக்கிய தேசிய கட்சியின் தலைமையகமான சிறிகொதாவில் இன்று திங்கட்கிழமை இடம் பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனைத் தெரிவித்தார்.

இனி வரும் காலங்களில்  ஐக்கிய தேசிய கட்சியோ,  பொது ஜன பெரமுனவோ, வெற்றிப் பெற வேண்டுமாயின்  இதற்கு ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் ஆதரவு வேண்டும் என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிவேன குறிப்பிட்டுள்ளமை ஏற்றுக்கொள்ளக் கூடியது.

ஆனால்  தமது கட்சியின் நலன்களுக்கும்,    உறுப்பினர்களின் நோக்கத்திற்காகவும்  ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சி பொது ஜன பெரமுனவுடன் ஒன்றினைந்தால்  அது ஜனாதிபதியின் கொள்கைக்கு முரணாக காணப்படும்.

எவ்வாறு  இருப்பினும் வெற்றியினை கருத்திற் கொண்டு ஐக்கிய தேசிய கட்சியினர் ஒருபோதும் மஹிந்த தரப்பினருடன் ஒன்றினைய மாட்டார்கள் என்றார்.

Leave a comment