ஆர்ப்பாட்டங்களின் மூலம் நாட்டில் அபிவிருத்தியை ஏற்படுத்த முடியாது என ஊவா மாகாண முதலமைச்சர் சாமர சம்பத் தெரிவித்துள்ளார்.
பதுள்ளை பகுதியில் இடம்பெற்ற நிகழ்வொன்றின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
எதிர்க்கட்சியில் இருந்து கொண்டு எந்த கடமையையும் செய்யமால் இருக்கும் குழுவினர் கொழும்பிற்கு மக்களை அழைத்து ஆர்ப்பாட்ட்ததை மேற்கொண்டிருப்பினும் கடமையை செய்பவர்களுக்கு அவ்வாறு செய்ய வேண்டிய அவசியம் இல்வை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
கொழும்பு பற்றி தெரியாமல் ஆர்ப்பாட்டத்திற்கு வந்த கிராம மக்களுக்கு நஞ்சு வழங்கிய பானத்தை யார் வழங்கியிருந்தாலும் அதனை அனுமதிக்கப்பட முடியாது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

