யோகேந்திர யாதவ் கைது: தமிழகத்தில் அறிவிக்கப்படாத அவசரநிலை!

196 0

சென்னை எக்ஸ்பிரஸ் சாலைக்கு நிலம் எடுக்க எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்திய விவசாயிகளை சந்திக்கச் சென்ற  யோகேந்திர யாதவ் கைது செய்யப்பட்டதன்  மூலம் தமிழகத்தில் அறிவிக்கப்படாத அவசரநிலை நிலவுகிறது என்று மூத்த வழக்கறிஞர் பிரசாந்த் பூஷன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

சேலம் – சென்னை இடையே எட்டுவழிச்சாலை அமைக்க விவசாய நிலம் எடுக்கப்படுவதைக் கண்டித்து பல்வேறு தரப்பினரும் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த நிலையில் எட்டுவழிச்சாலைக்கு எதிரான போராட்டக்குழுவினர் அழைப்பின் பேரில் ஸ்வராஜ் இந்தியா  அமைப்பின் தலைவரும், சமூக செயற்பாட்டாளருமான யோகேந்திர யாதவ் இன்று அங்குச் சென்றார். செங்கம் அருகே காரில் சென்றபோது அவரும், அவரது ஆதரவாளர்களும் தடுத்து நிறுத்தப்பட்டு கைது செய்யப்பட்டனர்.

இதற்கு மூத்த வழக்கறிஞர் பிரசாத் பூஷன் ட்விட்டரில் தனது கண்டனத்தை பதிவு செய்துள்ளார். அதில் அவர் கூறுகையில் ‘‘டெல்லியில் இருந்து ரிமோட் கன்ட்ரோல் மூலம் இயக்கப்படும் தமிழகத்தில் உண்மையில் போலீஸ் ராஜ்ஜியம்தான் நடக்கிறது. நிலத்தை கையகப்படுத்துவதற்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் விவசாயிகளைச் சந்திக்கச் சென்ற யோகேந்திர யாதவை எந்த சட்டத்தின் அடிப்படையில் போலீஸார் கைது செய்தார்கள். அறிவிக்கப்படாத அவசரநிலை நிலவுகிறது’’ என தெரிவித்துள்ளார்.

Leave a comment