பகிடிவதைக்கு எதிராக கடுமையான சட்டம் விரைவில்-சிறிசேன

236 0

பல்கலைக்கழகங்களில் பகிடிவதையுடன் சம்பந்தப்பட்டவர்களுக்கு கடுமையான தண்டனையை பெற்றுக் கொடுக்கப் போவதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.

பகிடிவதையை ஒழிக்கும் சட்டத்தை முறையாக நடைமுறைப்படுத்தப் போவதாகவும் ஜனாதிபதி கூறியுள்ளார்.

இலங்கை தொழிற்பயிற்சி அதிகார சபைக்கான பயிற்சி நிலைய கட்டிடமொன்றுக்கு அடிக்கல் நடும் நிகழ்வில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே ஜனாதிபதி இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

பல்கலைக்கழகத்துக்கு தெரிவு செய்யப்பட்டு, பகிடிவதை காரணமாக செல்லாமல் தவிர்ந்து கொண்ட மாணவர்கள் 1500 பேருக்கும் அதிகமானவர்கள். கடந்த 25 வருடங்களில் இந்த பகிடிவதை காரணமாக 25 பேருக்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளதாகவும் ஜனாதிபதி கூறியுள்ளார்.

மறைந்த முன்னாள் அமைச்சர் ரிச்சர்ட் பத்திரனவினால் கொண்டுவரப்பட்ட சட்ட மூலத்தை மீண்டும் கொண்டுவர நடவடிக்கை எடுக்குமாறும் ஜனாதிபதி ஆலோசனை வழங்கியுள்ளார்.

Leave a comment