யாரை முதன்மை வேட்பாளராக நிறுத்துவது தொடர்பில் எதிரணியினரிடையே முரண்பாடுகள்-ருவான்

205 0

அடுத்த ஜனாதிபதி தேர்தலில் யாரை வேட்பாளராக நிறுத்துவது என்பது தொடர்பில் மக்களின் விருப்பத்தையறிய மஹிந்த வின் கூட்டு எதிரணியினர் மேற்கொண்ட பேரணி இறுதியில் கேலி கூத்தாக மாறிவிட்டது என இராஜாங்க அமைச்சர் ருவான் விஜயவர்தன தெரிவித்தார்

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் யாரை வேட்பாளராக நிறுத்துவது என்பது தொடர்பில் மஹிந்த அணியனரிடையே பிளவுகள் ஏற்பட்டுள்ளன. நாட்டின் அடுத்த தலைவராக யாரை நியமிப்பது என்ற மக்களின் விருப்பத்தை அறிந்து கொள்ளவே பேரணியை நடத்தினார்கள். இறுதியில் இந்த பேரணி கேலி கூத்தாக மாறிவிட்டது

கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர்,

முதலில் 10 இலட்சம் பேர் பேரணியில் பங்கேற்பார்கள் என்றார்கள். பின்னர் 2 இலட்சம் பேர் பங்கேற்பார்கள் என கூறினார். இறுதியில் 2ஆயிரம் பேரே பேரணியில் கலந்துகொண்டார்கள்.

கோடி கணக்கில் செலவழித்து மக்கள் பலத்தை திரட்ட முயற்சித்தார்கள். பொதுமக்கள் ஆதரவு வழங்கவில்லை. பொதுஜன பெரமுனவின் சில ஆதரவாளர்களே இதில் கலந்துகொண்டனர்.

அடுத்து ஜனாதிபதி தேர்தலில் யாரை முதன்மை வேட்பாளராக நிறுத்துவது என்பது தொடர்பில் எதிரணியினரிடையே முரண்பாடுகள் தொடர்ந்துகொண்டிருக்கின்றன.

இதற்கு விடை தேடவே அரசாங்கத்திற்கு எதிராக எதிர்ப்பு பேரணியை நடத்தினார்கள். இறுதியில் அதுவும் கோமாளித்தனமாகிவிட்டது.

இந்த பேரணியால் பொதுமக்களும், மாணவர்களுமே பாதிக்கப்பட்டனர். அரசாங்கத்துக்கு எந்த அழுத்தமும் ஏற்படவில்லை என்றார்.

Leave a comment