நாடு திரும்பியும் அகதிகளாக வாழும் மக்களுக்கு உதவுமாறு பாராளுமன்றிற்கு கோரிக்கை

237 0

தமிழ் நாட்டில் அகதிகளாக சென்று தற்போது சொந்த நாட்டிற்கு திரும்பும் மக்களுக்கு அணைத்து உதவிகளையும் வழங்க வேண்டுமென யாழ்- மாவட்டச் செயலகத்தினால் பாரளுமன்றத்திற்கு கோரிக்கை ஒன்ற முன்வைக்கப்பட்டுள்ளது.

2019 ஆம் ஆண்டுக்கான இலங்கையின் வரவு செலவுத் திட்டம் தயாரிப்பது தொடர்பில் பாராளுமன்ற நிதிக்குழுவின் மக்கள் கருத்தறியும் கலந்துரையாடலொன்று திங்கட்கிழமை யாழ்ப்பாணத்தில் நடைபெற்றபோதே மேற்படி கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.

இலங்கையில் இடம்பெற்ற உள்நாட்டு யுத்தம் காரணமாக வடக்கு கிழக்கு மாகாணத்திலிருந்து இலட்சக் கணக்கான மக்கள் தமிழகத்தில் அகதிகளாக தஞ்சமடைந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் யுத்தம் முடிவடைந்த பின்னர்  அவர்கள் மீண்டும்  இலங்கைக்கு திரும்பி வருகின்றனர்.

இவ்வாறு கடந்த எட்டு வருடங்களில் யாழ் மாவட்டத்தில் மட்டும் 1500 பேர் வந்துள்ளாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

எனினும்  தற்போதும் தமிழகத்தில் சுமார் 80000 வரையிலான மக்கள் அகதிகளாக வாழ்ந்து வருகின்றனர்.

அவர்களில் சுமார் 15000 பேர் யாழ் மாவட்டத்தைச் சேர்ந்தவர்களாகவே காணப்படுவதாக யாழ் மாவட்டச் செயலக புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன.

யுத்தத்தின் பின்னராக தமது சொந்த நாட்டிற்குத் திரும்பி வருகின்ற மக்களுக்கான அடிப்படை வசதி வாய்ப்புக்கள் முழுமையாக ஏற்படுத்திக் கொடுக்கப்படவில்லை என தமிழகத்திலிருந்து திரும்பிய மக்கள் குற்றஞ்சாட்டி வருகின்றனர்.

குறிப்பாக யாழ்ப்பாணத்திற்கு வந்திருக்கின்ற 1500 மக்களுக்கு அடிப்படை வசதிகள் இதுவரையில் முழுமையாக ஏற்படுத்திக் கொடுக்கப்படவில்லையெனவும் இவர்களுக்கான அடிப்படை வசிதிகளை ஏற்படுத்திக் கொடுப்பதற்கு அரசாங்கம் போதுமான நிதி ஒதுக்கீடுகளை மேற்கொள்ளவில்லை என்று யாழ் மாவட்டச் செயலகம் தெரிவித்துள்ளது.

குறித்த மக்கள் தமிழகத்தில் இருந்து நாடு திரும்பியும் தமக்கான அடிப்படை வசதிகள் செய்து தரவில்லையென தெரிவித்ததோடு அரசானது தமக்கு உதவிகளை செய்ய முன்வரவேண்டுமென தெரிவத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a comment