சரத் குமார குணரத்னவுக்கு வௌிநாடு செல்ல அனுமதி

223 0

நீர்கொழும்பு களப்பு அபிவிருத்தி நிதியை மோசடி செய்ததாக குற்றம் சுமத்தப்பட்டுள்ள முன்னாள் கடற்றொழில் பிரதியமைச்சர் சரத் குமார குணரத்னவுக்கு வௌிநாடு செல்வதற்கு கொழும்பு மேல் நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.

ஒக்டோபர் மாதம் 01ம் திகதி முதல் 16ம் திகதி வரையான காலத்தில் இந்தியாவுக்கு செல்ல வேண்டி இருப்பதாக சரத் குமார குணரத்ன சார்பாக ஆஜரான சட்டத்தரணி நீதிமன்றில் தெரிவித்தார்.

இதன்காரணமாக தற்போது அவருக்கு விதிக்கப்பட்டுள்ள தடையை குறித்த காலத்தில் விலக்கிக் கொள்ளுமாறு சட்டத்தரணி கோரினார்.

இந்தக் கோரிக்கைக்கு சட்ட மா அதிபர் சார்பில் ஆஜரான அரச தரப்பு சட்டத்தரணி எதிர்ப்பு வௌியிட்டார்.

எவ்வாறாயினும் சரத் குமார குணரத்னவுக்கு வௌிநாட்டுப் பயணத்துக்கான அனுமதியை வழங்கி நீதிபதி சசி மகேந்திரன் உத்தரவிட்டுள்ளார்.

Leave a comment