அறிக்கையில் தவறில்லை – மாகாண எல்லை மீள்நிர்ணய ஆணைக்குழு

5246 19

தங்களுக்கு விதிக்கப்பட்ட சட்ட நிபந்தனைகளுக்கு அமைவாகவே தங்களின் பணி அமைந்திருந்ததாகவும், தங்களது அறிக்கையில் குறைகள் இருக்கவில்லை என்றும் மாகாண சபை தேர்தல் எல்லை மீள்நிர்ணய ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

அதன் தலைவர் கனகரட்னம் தவலிங்கம்  இந்த விடயத்தை கூறியுள்ளார்.

கட்சி அடிப்படையிலான தொகுதிகளை உருவாக்குவது தங்களது கடமையல்லவென்றும் அவர் தெரிவித்தார்.

இதேவேளை, இந்த அறிக்கை தயாரிப்பு பணிகளுக்காக 21 மில்லியன் ரூபா செலவானதாக வெளியான தகவல் உண்மைக்கு புறம்பானது என்றும், மாகாண சபை தேர்தல் எல்லை மீள்நிர்ணய ஆணைக்குழு தலைவர் கனகரட்னம் தவலிங்கம் குறிப்பிட்டார்.

Leave a comment