மஹிந்தவை பிரதமராக நியமிக்க ஜனாதிபதி விருப்பம்!

4295 21

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை பிரதமராக நியமிப்பதில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கு எவ்வித அதிருப்தியும் இல்லை என பாராளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார். 

இன்று (27) கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வொன்றின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இதேவேளை முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவும் பிரதமராக பதவியை ஏற்றுக்கொள்வதற்காக விருப்பத்துடன் ஜனாதிபதிக்கு பதிலளிக்க வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இதனூடாக ஆட்சியில் மாற்றம் ஏற்படலாம் எனவும் எதிர்வரும் ஒன்றரை வருடங்களுக்குல் அரசாங்கத்தால் நாட்டிற்கு ஏற்படும் விளைவுகளை தடுக்கலாம் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Leave a comment