மட்டக்களப்பு மாவட்டம் போரதீவுப்பற்று பகுதியில் அமைந்துள்ள தெரிவு செய்யப்பட்ட 30 இளைஞர் யுவதிகளுக்கான தலைமைத்துவப் பயிற்சிநெறி சனி மற்றும், ஞாயிறு தினங்களில் தும்பங்கேணி வேள்ட்விஸன் கட்டடத்தில் நடைபெற்றது.
இந்த பயிற்சி நெறியில் களுமுந்தன்வெளி, சுரவணையடியூற்று, தும்பங்கேணி, காந்திபுரம், ஆகிய கிராமங்களிலிருந்து இளைஞர் யுவதிகள் கலந்து கொண்டனர்.
இலங்கைச் செஞ்சிலுவைச் சங்கம், வேள்ட்விஸன் லங்கா, இளைஞர் சேவை மன்றம், மற்றும், போரதீவுப்பற்று பிரதேச கல்நடை அபிவிருத்திச் சங்கம், போன்ற அமைப்புக்கள் ஒன்றினைந்து இப்பயிற்சியை நடாத்தியிருந்தது.
இலங்கைச் செஞ்சிலுவைச் சங்கத்தின் மட்டக்களப்புக் கிளையின் தலைவரும், சிரேஸ்ட பயிற்றுவிப்பாளருமான த.வசந்தராஜா இதன்போது கலந்து கொண்டு பயிறிசி நெறியினை வழங்கினார்.
இதன்போது வேள்ட் விஸன் வெல்லாவெளி பிராந்திய அபிவிருத்தித் திட்ட முகாமையாளர் பி.றோகாஸ், போரதீவுப்பற்று பிரதேச இளைஞர் சேவை உத்தியோகஸ்தர் எஸ்.அருளானந்தம், இளைஞர் சேவை மன்றத்தின் போரதீவுப்பற்று பிரதேச சம்மேளனத்த தலைவர் பி.தவராசா, மற்றும் இலங்கைச் செஞ்சிலுவைச் சங்கத்தின் போரதீவுப்பற்று பிரதேச நிருவாக உறுப்பினர்கள், கால்நடை அபிவிருத்திச் சங்கத்தின் தலைவர் தெ.சிவபாதம். உட்பட பலர் கலந்து கொண்டிருந்தனர்.
ஆசிரியர் தலையங்கம்
-
இன்று சர்வதேச மகளிர் தினம்!
March 8, 2025
தமிழர் வரலாறு
-
கேணல் கிட்டுவின் வீரகாவியம்
January 17, 2025 -
முன்னால் கடல் பின்னால் நிலம்! தளபதி ஜெயம்
December 6, 2024
கட்டுரைகள்
எம்மவர் நிகழ்வுகள்
-
தமிழர் விளையாட்டு விழா 2025-பெல்சியம்
July 17, 2025