யாழ்.மாணவன் விபத்தில் மரணம்: வெளியானது காணொளி விபத்துக்கு காரணமானவர் தப்பியது எப்படி? அதிர்ச்சித் தகவல் (படங்கள் இணைப்பு)

529 0

2016-06-25 14.42.30யாழ். நகரில் கடந்த வியாழக்கிழமை இடம்பெற்ற விபத்தில் யாழ். மத்திய கல்லூரியின் மாணவனான தே.நிரோஜன் என்பவர் உயிரிழந்தார்.
கே.கே.எஸ். வீதி, வண்ணை சிவன் கோயிலுக்கு அண்மையாக உணவகம் ஒன்றின் முன்பாக இடம்பெற்ற இந்த விபத்துக் குறித்த காணொளிக் காட்சிகள் இணையத் தளங்களில் வெளியாகி பலரையும் அதிர்ச்சியையும் கவலையையும் ஏற்படுத்தியுள்ளது.
விபத்து இடம்பெற்ற இடத்தின் முன்பாக உள்ள உணவகத்தின் இரு புறங்களில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கமெராக்களிலும் பதிவாகியுள்ள விபத்தின் காட்சியில் வருபவை வருமாறு:
உணவகத்தின் முன்பாக ஹைஏஸ் வாகனம் ஒன்று வந்து தரித்து நிற்கிறது. அதிலிருந்து ஒருவர் இறங்கி கடையின் முன்புறம் இறங்கி நிற்கிறார். மரணமான மாணவன் பாடசாலை சீருடையுடன் சைக்கிளில் வந்து கொண்டிருக்கிறார். மாணவனை கவனிக்காத ஹைஏஸ் வாகன சாரதி கதவைத் திறக்கிறார்.
மாணவன் வாகனக் கதவுடன் மோதுண்டு கீழே விழுகிறார். அச்சமயம் அதி வேகமாக வந்த பட்டா வாகனம் நொடிப் பொழுதில் மாணவன் மீதேறி சுமார் 12 மீற்றர் தூரம் அவனை இழுத்துச் சென்று நிற்கிறது.
ஆனால் விபத்து ஏற்படக் காரணமான ஹைஏஸ் வாகன சாரதி மீண்டும் கதவை மூடிவிட்டு உள்ளேயே இருக்கிறார். இந்நிலையில் அப்பகுதியில் நின்றவர்கள் மாணவன் இறந்து கிடக்கும் இடத்தை நோக்கி ஓடவே, ஹைஏஸில் இருந்து முன்னர் இறங்கியவர் வாகனத்துக்கு அண்மையாக கிடந்த சைக்கிளை எடுத்து வேறு இடத்தில் போடுகிறார்.
பொதுமக்களின் வாகனம் மாணவனை மோதிய பட்டா வாகன சாரதி மீது இருக்கவே அந்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி ஹைஏஸ் வாகனத்தில் வந்தவர்கள் தப்பி சென்றுவிட்டனர்.
மாணவனின் இறுதிக் கிரியைகள் இடம்பெற்ற நிலையில் வெளியான இந்தக் காணொளி காட்சி பலரையும் கவலையையும் விபத்துக்குக் காரணமானவர் கைது செய்யப்படாததால் விசனத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

2016-06-25 14.43.08 2016-06-25 14.43.36 2016-06-25 14.42.30

Leave a comment