தெற்கு அதிவேக வீதியில் வாகன விபத்து ; ஸ்தலத்திலேயே சாரதி பலி!

317 0

தெற்கு அதிவேக வீதியில் இடம்பெற்ற வாகன விபத்தொன்றில் வாகனச் சாரதி சம்பவ இடத்திலேயே பலியாகியுள்ளார்.

தெற்கு அதிவேக வீதியின் சூரியவெவ பகுதியிலேயே குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது.

குறித்த வீதியில் மேற்கொள்ளப்பட்டுவரும் திருத்தப்பணிகளில் ஈடுபட்டுக்கொண்டிருந்த ஜே.சி.பி. இயந்திர சாரதியொருவர் மதிய உணவிற்காக மோட்டார் சைக்கிளில் சென்று குறித்த வேலைத் தளதிற்கு திரும்பிக்கொண்டிருக்கும் போது எதிரே வந்த பௌசர் வாகனத்துடன் மோதுண்டதிலேயே குறித்த சாரதி சம்பவ இடத்திலேயே பலியாகியுள்ளார்.

குறித்த விபத்தில் பலியானவர் மஸ்கெலியா பிரதேசத்தைச் சேர்ந்த 33 வயதுடைய சமிந்த குமாரசிரி என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

இந்நிலையில் குறித்த பௌசர் வாகனத்தின் சாரதி தப்பி சென்றுள்ள நிலையில் அவரை தேடும் பணிகளில் பொலிஸார் ஈடுபட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a comment