மகிந்த ராஜபக்ச ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட அடிப்படை உரிமை மனுவொன்றை தாக்கல்செய்ய முடியும்- உதயகம்மன்பில

214 0

ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட முடியுமா என்ற உச்சநீதிமன்றத்தின் ஆலோசனையை பெறுவதற்காக முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச அடிப்படை உரிமை மனுவொன்றை தாக்கல்செய்ய முடியும் என நாடாளுமன்ற உறுப்பினர் உதயகம்மன்பில தெரிவித்துள்ளார்.

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச மீண்டும் பதவிக்கு வரவேண்டும் என கருதும் எவரும் மகிந்த ராஜபக்ச தவிர வேறு எவராவது போட்டியிட்டால் தனது வாக்குரிமை குறித்த  அடிப்படை உரிமை மீறப்படும் என தெரிவித்து உச்சநீதிமன்றில் அடிப்படை உரிமை மனுவை தாக்கல் செய்யலாம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

நிகால் ஜயவிக்கிரம போன்ற சட்டநிபுணர்கள் இது குறித்து தெரிவித்துள்ள கருத்துகள் குறித்து  என்னால் கருத்து தெரிவிப்பது கடினம் என குறிப்பிட்டுள்ள உதய கம்மன்பில  அவர்கள் முன்னாள் ஜனாதிபதி போட்டியிட முடியும் என்பதை எதனை வைத்து தெரிவித்தார்கள் என்பது தெரியவில்லை எனவும் குறிப்பிட்டுள்ளார்.

Leave a comment