கல்முனை பிரதான வீதியில் விபத்து – ஒருவர் பலி

429 0

மட்டக்களப்பு  கல்முனை பிரதான வீதியில் தாளங்குடா பகுதியில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

கார் ஒன்றும் சைக்கிளில் ஒன்று மோதியே இந்த விபத்து இன்று (13) காலை இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

விபத்தில் படுகாயங்களுக்குள்ளான சைக்கிளில் சென்ற நபர், சிகிச்சைகளுக்காக ஆரையம்பதி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதுடன், மேலதிக சிகிச்சைகளுக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்தவர் 55 வயது நிரம்பிய புதுக்குடியிருப்பு பகுதியை சேர்ந்தவர் என தெரிவிக்கப்படுகிறது.

விபத்து தொடர்பில் மேலதிக விசாரணைகளை காத்தான்குடி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a comment