‘கரும்பவாளி’ ஆவணப்படம் திரையிடல்!

300 0

‘கரும்பவாளி’

ஆவணப்படம் திரையிடல்

(25 நிமிடங்கள்)

இயக்குனர் – வசீகரன் சுசீந்திரகுமார்

மரபுரிமைகளைப் பேணுவதற்கும் அவற்றை மீளப்பயன்பாட்டிற்குள் கொண்டுவருவதற்கும் இருக்கின்ற காலத்தின் தேவையைப்பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தவும், வரலாறு பற்றித் தேடல்களை முன்னெடுக்கவுமான ஒரு பயணம் தான் கரும்பவாளி.

உடுப்பிட்டிப் பகுதியில் இருநூறு வருடங்களுக்கு முன் வாழ்ந்த வீராத்தை எனும் பெண் அந்தக் கிராமத்திற்கு கேணிகளையும், ஆவுரஞ்சிக் கற்களையும், தண்ணீர்ப்பந்தலையும் தானங்களாக அமைத்துக் கொடுத்துள்ளார். மந்தை வளர்ப்பை வாழ்வாதாரமாகக் கொண்ட அந்தக் கிராமத்தின் மக்களுக்காக வீராத்தை செய்திருக்கும் பணிகளையும், அதைக் குறித்ததாக அந்தக் கிராமத்தில் நிகழும் வாய்மொழி வழக்காறுகளையும் ஆய்வு ரீதியிலான தகவல்களையும் திரட்டி ஆவணமாக்கும் முயற்சியே கரும்பவாளி என்கிற இந்த ஆவணப்படம். நமது மரபுரிமைகளைப் பேணவும் ஆவணப்படுத்தவும் அடுத்த தலைமுறைகளுக்குக் கடத்தவுமான பயணத்தின் ஒரு கீற்றை இந்த ஆவணப்படத்தின் மூலம் நமது சமூகத்திற்குள் உரையாடலுக்குக் கொண்டு வரும் முயற்சியாக கரும்பவாளி ஆவணப்படத்தின் திரையிடல் யாழ். பொதுசன நூலகக் குவிமாட கேட்போர் கூடத்தில் ஓகஸ்ட் மாதம் 4 ஆம் திகதி சனிக்கிழமை மாலை 3:30 இற்கு இடம்பெறவுள்ளது.

Leave a comment