யாழ்ப்பாணம் வாள்ப்பாணமாக மாறி விட்டதோ?

28539 0

ஈழத்தீவின் தலையாக காணப்படும் யாழ்ப்பாணம் தமிழர்களின் தலைநகர் போன்றே விளங்கியது. கல்வி, கலை , கலாச்சாரம் போன்றவற்றில் தனித்துமாக திகழ்ந்தது.

ஆறுமுக நாவலர் போன்ற பற்றாளர்கள், யோகர் சுவாமிகள் போன்ற ஞானிகள், தந்தை செல்வா போன்ற அரசியல் தலைவர்கள் , போராசியர் சிவத்தம்பி போன்ற கல்வியலாளர்கள், பிரபாகரன் போன்ற போராளிகள் , மாமனிதர் துரைராஜா போன்ற அறிவியவாளர்கள் , உள்ளிட்ட பல்வேறுபட்ட மாண்பு நிறைந்தவர்களை பெற்று சுமந்து வளர்ந்த பெருமை கொண்டது யாழ் மண் இன்று போதைவஸ்தின் புகழிடமாகவும் வன்முறைகளின் இருப்பிடமாகவும் மாறி விட்டது.

போர்த்துக்கீசியரை வீரத்துடன் எதிர்கொண்ட மாவீரன் சங்கிலியன் யாழ்ப்பாண தமிழ் அரசின் தலைசிறந்த மன்னனாக விளங்கினான் .போர்த்துக்கீசியரின் ஆக்கிரமிப்பை எதிர்த்து இறுதி வரை அவர்களுக்கெதிராகப் போராடி வீர மரணமடைந்தவன் சங்கிலியன் என்பது வரலாற்றுப் பதிவாகும்.

கடைசி தமிழ் மன்னரான சங்கிலியனின் சிலை யாழ்ப்பாணத்தின் நல்லூர் முத்திரைச் சந்தியில் வைக்கப்பட்டிருந்தது. வீரவாளை உயர்த்தி பிடித்தப்படி சங்கிலியன் குதிரையில் பாய்ந்து செல்வது போன்று அந்த சிலை வடிவமைக்கப்பட்டிருந்தது.

2011 காலப்பகுதியில் அந்த வீரம் செறிந்த சிலை சிங்கள ஏகாதிபத்திய கைக்கூலிகளால் அகற்றப்பட்டது. அதற்கு எதிர்ப்பு கிளம்பியதை தொடர்ந்து மீண்டு அதே இடத்தில் சிலை நிறுவப்பட்டது. ஆனால், மன்னன் சங்கிலியனின் சிலையின் வலது கையில் விண்ணை நோக்கி உயர்த்தி பிடித்து இருந்த வீரவாள் இல்லை. வலது கை மடக்கி வைக்கப்பட்ட நிலையில் மாற்றி வடிவமைக்கப்பட்டுள்ளது. சங்கிலிய மன்னன் சரணடைவது போன்று சிலை மாற்றி நிறுவப்பட்டது.

சங்கிலியன் சிலையின் கையில் இருந்த வீர வாளை எடுத்து விட்டால், தமிழர்கள் சுதந்திரம், சுயநிர்ணய உரிமை மற்றும் விடுதலைப் பாதையை மறந்து விடுவார்கள் என சிறிலங்கா ஏகாதிபத்திய அரசாங்கம் தவறாக மதிப்பிட்டது. “எழுக தமிழ்” ஆக தமிழர்கள் எழுந்து நிற்பதை கண்ட சிங்கள ஏகாதிபத்தியம் தமிழர்களிடம் இருந்து எடுக்கப்பட்ட வாளையே தமிழர்களுக்கு எதிராக பயன்படுத்த தொடங்கியது. இதற்கு பலிகடாவாக அப்பாவி சில தமிழ் இளைஞர்களை போதை பொருட்களுக்கு அடிமையாக்கியதுடன் தமது கைக்கூலிகளாக அவர்களை பயன்படுத்தி யாழில் வாள்வெட்டு கலாச்சாரம் ஒன்றை ஏற்படுத்தி விட்டு நாடகம் ஆடுகிறது.

இந்த வாள் வெட்டு குழுக்கள் யார்? எதற்­காக இப்­ப­டிச் செய்­கி­றார்­கள்? இவர்­க­ளுக்கு எதி­ராக ஏன் சிறிலங்கா காவல் துறை தீவி­ர­மான நட­வ­டிக்கை எத­னை­யும் எடுக்­க­வில்லை , எடுப்பதும் இல்லை இர­வில் இத்­த­கைய தாக்­கு­தல்­க­ளைச் செய்­து­கொண்­டி­ருந்­த­வர்­கள் இப்­போது பட்­டப் பக­லி­லும் வாள் வெட்டை தொடர்கிறார்கள். இவர்களுக்கு இந்த துணிவை கொடுத்தது யார்?

சிறிலங்கா காவல் துறை உட­னடியாக தீவீர நட­வ­டிக்கை எடுத்ததாக வேண்டும் . யாழ்ப்பாணம் வாள்பாணமாக மாறாது பாதுகாப்பது தமிழ் அரசியல் தலைவர்களின் பொறுப்பாகும். இதனை அவர்கள் செய்வார்களா?

Leave a comment