மருத்துவமனையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் – காவல்துறை ஆணையர் விஸ்வநாதன் ஆய்வு செய்தார்

228 0

திமுக தலைவர் கருணாநிதி அனுமதிக்கப்பட்டுள்ள காவேரி மருத்துவமனையில் செய்யப்பட்டுள்ள பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து சென்னை காவல்துறை ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் ஆய்வு மேற்கொண்டார்.

காவேரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் தி.மு.க தலைவர் கருணாநிதிக்கு தற்காலிகமாக சிறிது பின்னடைவு ஏற்பட்டது. மருத்துவர்களின் தீவிர முயற்சியால் அவரது உடல்நிலை மீண்டும் சீரானது.
இதற்கிடையே, தி.மு.க. தலைவர் கருணாநிதியின் உடல்நலம் குறித்து தெரிந்து கொள்வதற்காக காவேரி மருத்துவமனை பகுதியில் மழையையும் பொருட்படுத்தாமல் திமுக தொண்டர்கள் குவிந்தனர். தொண்டர்களிடையே ஏற்பட்ட தள்ளுமுள்ளை சரிசெய்ய போலீசார் லேசான தடியடி நடத்தி கூட்டத்தைக் கலைத்தனர்.
இதைத்தொடர்ந்து, திமுக தலைவர் கருணாநிதி சிகிச்சை பெற்று வரும் காவேரி மருத்துவமனைக்கு சென்னை காவல்துறை ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் வருகை தந்தார். அவர் மருத்துவமனையைச் சுற்றி போடப்பட்டுள்ள பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து ஆய்வு மேற்கொண்டார்.
மேலும், மருத்துவமனை அருகில் திரண்டிருந்த திமுக தொண்டர்களை அங்கிருந்து கலைந்து போகும்படி கோரிக்கை விடுத்தார்.

Leave a comment