காவிரியாற்றில் சிக்கித் தவித்த நாய்க்குட்டிகளைத் தீயணைப்பு வீரர்கள் உயிரைப் பணயம் வைத்துக் காப்பாற்றிய சம்காவிரியாற்றில் சிக்கித் தவித்த நாய்க்குட்டிகளைத் தீயணைப்பு வீரர்கள் உயிரைப் பணயம் வைத்துக் காப்பாற்றிய சம்பவம் திருச்சியில் நடந்ததுபவம் திருச்சியில் நடந்தது.

மேலும் காவிரியில் வெள்ளம் அதிகமாக வருவதால் மாவட்ட நிர்வாகம் சார்பில் காவிரி கரைஓர பகுதிகளில் வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.மூன்று நாள்களாகக் காவிரியில் அளவுக்கு அதிகமாகத் தண்ணீர் பாய்ந்து செல்கிறது. இந்நிலையில் சென்னை திருச்சி தேசிய நெடுஞ்சாலையை ஒட்டிய காவிரி ஆற்றங்கரை பகுதியில் நாய் ஒன்று குட்டிகளுடன் ஒரு மணல் திட்டில் தவித்துக் கொண்டிருப்பதை தேசிய நெடுஞ்சாலை துறை அதிகாரியான சக்தி என்பவர் பார்த்தார்.
அந்த நாயை காப்பாற்ற துடித்தவர், காவிரியில் வெள்ளம் அதிகமாகத் இருப்பதால் கவலையோடு அதனைக் கவனித்து வந்தார்.
நேற்று காலையில் காவிரியில் கொஞ்சம் தண்ணீர் வரத்து குறைந்ததால் காவிரி ஆற்றின் நடுவே உள்ள மணல் திட்டு ஒன்றில் ஒரு தாய் நாய், குட்டிகளோடு தவித்துக் கொண்டு இருக்கும் தகவலை தீயணைப்பு துறைக்கு தெரிவித்தார்.
அடுத்த சில நொடிகளில் தீயணைப்பு வீரர்கள் அந்த இடத்திற்கு விரைந்து வந்தனர். வாயில்லா ஜீவன்கள் காவிரி ஆற்றுக்குள் சிக்கித் தவிப்பதை பார்த்த தீயணைப்பு வீரர்கள், தங்கள் உயிரைப் பணயம் வைத்து காவிரி ஆற்றில் இறங்கினர்.
அடுத்து தாய் மற்றும் குட்டிகளும் காப்பகத்திற்குப் பத்திரமாக அனுப்பி வைக்கப்பட்டது. வெள்ளம் பாய்ந்தோடும் காவிரி ஆற்றில் சிக்கித் தவித்த நாய் மற்றும் அத குட்டிகளை உயிரை பணயம் வைத்துக் காப்பாற்றிய தீயணைப்பு வீரர்களையும், காப்பாற்ற உதவிய அதிகாரி சக்தியையும் அப்பகுதி மக்கள் பாராட்டினர்.

