அப்துல்கலாம் நினைவிடத்தில் அறிவியல் மையம் அமைப்பதற்கு மத்திய அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவரது பேரன் சேக் சலீம் கூறினார்.
மறைந்த முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாமின் 3-ம் ஆண்டு நினைவு தினம் இன்று கடைபிடிக்கப்படுகிறது. இதையொட்டி அவரது உடல் அடக்கம் செய்யப்பட்டுள்ள ராமேசுவரம் பேய்க்கரும்பில் உள்ள நினைவிடம் மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு இருந்தது.
நினைவிடத்தில் உள்ள அப்துல்கலாம் சமாதி அருகில் இன்று அவரது குடும்பத்தினர் சிறப்பு பிரார்த்தனை நடத்தி மலரஞ்சலி செலுத்தினர்.
பின்னர் பேரன் சேக் சலீம் நிருபர்களிடம் கூறியதாவது:-
இதைத்தொடர்ந்து கோளரங்கம், நூலகம், அறிவியல் மையம் ஆகியவற்றை அமைப்பதற்கு மத்திய அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.இதுவரை இந்த நினைவிடத்தை 33 லட்சம் பேர் பார்வையிட்டுள்ளனர். அப்துல்கலாமின் 3-ம் ஆண்டு நினைவு நாளான இன்று உலக நன்மைக்காகவும், அவரது ஆத்மா சாந்தியடையவும் குடும்பத்தினர் சிறப்பு பிரார்த்தனை செய்தோம். இவ்வாறு அவர் கூறினார்.

