
ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினரும் முன்னாள் விளையாட்டுத்துறை அமைச்சருமான மஹிந்தானந்த அளுத்கமகேவை எதிர்வரும் 22ஆம் திகதிவரை விளக்கமறியிலில் வைக்குமாறு கொழும்பு நீதவான் நீதிமன்ற நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
இன்று காலை குற்றப் புலனாய்வு பிரிவிற்கு வாக்குமூலம் ஒன்றை வழங்குவதற்காக அழைக்கபட்ட அவரிடம், மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளை அடுத்து கைது செய்யப்பட்டு நீதிமன்றில் ஆஜர் படுத்தப்பட்டார்.
கொழும்பு, கிங்ஸ்ஸி வீதியில் கட்டப்பட்டு வரும் வீடு தொடர்பில் அவரிடம் வாக்குமூலமொன்றை பெறுவதற்கே இன்று குற்றப் புலனாய்வு பிரிவிற்கு அவர் வரவழைக்கப்பட்டிருந்தார்.
இதேவேளை, முன்னாள் விளையாட்டு அமைச்சரும், ஐ.ம.சு.மு.வின் பாராளுமன்ற உறுப்பினருமான மஹிந்தானந்த அலுத்கமகேவுக்கு எதிராக கடந்த வாரம் ஊழல் வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்து.
விளையாட்டு அமைச்சராக இருந்த காலத்தில் ரூபா 5 கோடி 31 இலட்சம் பெறுமதியான விளையாட்டு உபகரணங்களை கொள்வனவு செய்து, அவற்றை வழங்கவில்லை எனும் குற்றச்சாட்டிற்கமைய, இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவினால் குறித்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

