கிளிநொச்சி கந்தசுவாமி ஆலய தேர் உற்சவம் இன்று (காணொளி)

480 0

kilinochchi-kanthaswamy-temple

கிளிநொச்சி அருள்மிகு கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்த மஹோற்சவ தேர் உற்சவம் இன்று நடைபெற்றது.
கிளிநொச்சி கந்சுவாமி ஆலயத்தின் மஹோற்சவம் கடந்த ஏழாம் திகதி கொடியேற்ற உற்சவத்துடன் ஆரம்பமாகி 9ஆவது நாளான இன்று தேர் உற்சவம் நடைபெற்றது.
இன்று அதிகாலையில் இடம்பெற்ற விசேட பூசை வழிபாடுகளைத் தொடர்ந்து, அடியவர்களின் அரோகரா கோஷத்தின் மத்தியில் கந்தசுவாமி அழகிய தேர் ஏறி அடியவர்களுக்கு அருள் பாலித்தார்.
கந்தனின் அருள் கடாட்சம் பெற அதிக எண்ணிக்கையான பக்தர்கள் தங்களின் நேர்த்திக்கடனான பிறதட்டை செய்தல், தீ சட்டி ஏந்தி செல்லுதல், பறவைக்காவடிகள் என தமது நேர்த்திக்கடன்களை செலுத்தினார்கள்
இன்று தேர்த்திருவிழா நடைபெற்ற நிலையில், நாளை தீர்த்த உற்சவமும் நடைபெறவுள்ளது.