தீவிரவாதத்தை பாகிஸ்தான் நிறுத்த வேண்டும் – இந்தியா – ஆப்கான் கூட்டு கோரிக்கை

274 0

modi_3010708fதீவிரவாதத்தை பாகிஸ்தான் நிறுத்த வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இந்தியாவும் ஆப்கானிஸ்தானும் கூட்டக இந்த கோரிக்கையை விடுத்துள்ளன.

உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இந்தியா வந்துள்ள ஆப்கானிஸ்தான் ஜனாதிபதி அஷ்ரப் கனிக்கும், பிரதமர் நரேந்திர மோடிக்கும் இடையில் பேச்சு வார்த்தை இடம்பெற்றது.

இதன்போது, இருதரப்பு உறவை பலப்படுத்துவது, பாதுகாப்பு ஒத்துழைப்பு, தீவிரவாதத்தை எதிர்த்துப் போரிடுவது உட்பட பல்வேறு விடயங்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டன.

அத்துடன், 3 முக்கிய ஒப்பந்தங்களும் கைச்சாத்தாகின.

இந்தநிலையில், இரு நாடுகளும் கூட்டாக வெளியிட்ட அறிக்கையில், பிராந்தியத்தில் அரசியல் நோக்கங்களுக்காக பாகிஸ்தான் தீவிர வாதத்தை பயன்படுத்தி வருவது கவலை அளிப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

பிராந்தியத்தில் அச்சுறுத்தலாக விளங்கும் தீவிரவாத அமைப்புகளை ஊக்குவிப்பது, அவற்றுக்கு புகலிடம் வழங்குவது போன்ற நடவடிக்கைகளை பாகிஸ்தான் நிறுத்திக் கொள்ள வேண்டும் என்றும் அந்த கூட்டறிக்கையில் வலியுறுத்தப்பட்டுள்ளது.