பிரித்தானியாவில் அணுசக்தி நிலையம் அமைய உள்ளது

352 0

anuபிரித்தானியாவில் அணு வலுசக்தி நிலையம் ஒன்றை  ஆயிரத்து 800 கோடி ஸ்டர்லின் பவுண் செலவில் நிர்மாணிப்பதற்கான அனுமதியினை பிரித்தானிய அரசாங்கம் வழங்கியுள்ளது.

பிரான்ஸ் மற்றும் சீன நிதியுதவியுடன் இந்த அணு உற்பத்தி நிலையம் பிரித்தானிய சமசெட்டில் உள்ள ‘ஹிங்க்லீ பொய்ன்டில் நிர்மாணிக்கப்படவுள்ளது.

பிரித்தானியாவில் நிர்மாணிக்கப்படவுள்ள இந்த அணு உற்பத்தி நிலையத்திற்கான வரைபடங்களை தயாரிப்பதற்கான அனுமதி தமக்கு வழங்கப்பட வேண்டும் என சீனா கோரியுள்ளது.

இந்த நிலையில் பிரித்தானியாவில் எதிர்காலத்தில் முன்னெடுக்கப்படும் வெளிநாட்டு முதலீடுகளுக்கு புதிய சட்ட வரையறைகளை பிரித்தானிய அரசாங்கம் நடைமுறைப்படுத்தவுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.