மோதல் தவிர்ப்பு நீடிப்பு

315 0

syria-protestசிரியாவில் அமுலாக்கப்பட்டுள்ள மோதல் தவிர்ப்பு மேலும் 48 மணி நேரத்துக்கு நீடிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்க ராஜாங்க திணைக்களம் இதனை அறிவித்துள்ளது.

அங்கு மோதல் தவிர்ப்பு அமுலாக்கப்பட்டு 2 தினங்கள் கடந்துள்ளன.

இந்த நிலையில் ராஜாங்க செயலாளர் ஜோன் கெரி மற்றும் ரஷ்யாவின் வெளிவிவகார அமைச்சர் சேர்ஜி வல்ரோவுக்கும் இடையில் காணப்பட்ட இணக்கப்பாட்டின் அடிப்படையில் இந்த கால நீடிப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

சிரியாவில் நிவாரணப் பணிகளை மேற்கொள்ள அதிக கால அவகாசம் தேவை என்ற அடிப்படையில் இந்த நீடிப்பு இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.