சலாவ சம்பவத்தில் சேதமடைந்த 492 வீடுகள் மக்களிடம் கையளிப்பு

5927 26

1166003535Jayanathகொஸ்கம, சலாவ இராணுவ முகாமிலுள்ள ஆயுதக் களஞ்சியசாலை வெடிப்பினால் சேதமடைந்த 492 வீடுகள் முற்றாக புனரமைக்கப்பட்டு மக்களிடம் கையளிக்கப்பட்டுள்ளதாக இராணுவம் தெரிவித்துள்ளது.
மேலும் 57 வீடுகளின் புனரமைப்பு பணிகள் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக இராணுவ ஊடக பேச்சாளர் பிரிகேடியர் ஜயநாத் ஜயவீர தெரிவித்துள்ளார்.

இதுதவிர, கடற்படையும் நீர்பாசன திணைக்களமும் இணைந்து 1581 குடிநீர் கிணறுகளை சுத்தப்படுத்தியுள்ளதாகவும் அவர் கூறினார்.

ஏனைய குடிநீர் கிணறுகளை சுத்தப்படுத்தும் பணிகள் தொடர்ந்து இடம்பெறுவதாகவும் இராணுவ ஊடக பேச்சாளர் பிரிகேடியர் ஜயநாத் ஜயவீர மேலும் குறிப்பிட்டுள்ளார்.

Leave a comment