தமக்கு தமிழ் தேசிய கூட்டமைப்பு உறுப்பினர்களால் கொலை அச்சுறுத்தல் என்கிறார் ஞானபிரகாசம் மரியசீலன்!

247 0

நானாட்டான் பிரதேச சபையின் ஐக்கிய தேசிய கட்சி உறுப்பினருக்கு நானாட்டான் பிரதேசபை அமர்வின் போது தமிழ் தேசிய கூட்டமைப்பு உறுப்பினர்களால் கொலை அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளதாக மன்னார் காவல் துறை அத்தியகட்சகர் அலுவலகத்தில் நேற்று வெள்ளிக்கிழமை (22) காலை முறைப்படு செய்யப்பட்டுள்ளது.

நானாட்டான் பிரதேச சபையின் ஐக்கிய தேசிய கட்சி உறுப்பினரான ஞானபிரகாசம் மரியசீலன் என்பவரே தனக்கு கொலை அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளதாக முறைப்பாடு செய்துள்ளார்.

நானாட்டான் பிரதேச சபையின் 4வது அமர்வு கடந்த 20ம் திகதி புதன் கிழமை இடம்பெற்றது.

குறித்த அமர்வில் பிரதேச சபையின் தலைவர் மற்றும் உப தலைவர் ஒருதலைபட்சமாக நடந்து கொள்வதாகவும், அபிவிருத்தி திட்டங்கள் அனைத்தும் தான்தோன்றித்தனமாக உறுப்பினர்களுடைய கருத்துக்களுக்கு மதிப்பளிக்காது எடுக்கப்படுவதாகவும், ஐக்கிய தேசிய கட்சியின் பிரதேச சபை உறுப்பினரான ஞானபிரகாசம் மரியசீலன் சபையில் தெரிவித்ததையடுத்து பிரதேச சபை அமர்வில் அமைதியின்மை ஏற்பட்டது.

தொடர்ந்தும் பேச முற்பட்ட போது கூட்டமைப்பின் உறுப்பினர்களால் இடையூறு விளைவிக்கப்பட்டதை தொடர்ந்து அமைதியின்மை கைகலப்பாக மாறியது. தொடர்ச்சியாக அமர்வை நடத்த முடியாமல் முடிவு ஏதும் இன்றி கூட்டம் முடிவுறுத்தப்பட்டது.

குறித்த அமர்வு இடம்பெற்று கொண்டிருந்த நிலையில் ஊடகவியளாலர்கள் மற்றும் உறுப்பினர் அனைவருக்கும் முன்னிலையில் தனக்கு கொலை அச்சுறுத்தல் விடுக்கப்பட்டதாகவும், எனவே தன்னை அச்சுறுத்தியமை தொடர்பாக நேற்று வெள்ளிக்கிழமை (22) காலை மன்னார் காவல் துறை அத்தியகட்சகர் நிலையத்திலும், முருங்கன் காவல் துறை நிலையத்திலும் முறைப்பாடு செய்துள்ளதாக நானாட்டான் பிரதேச சபை உறுப்பினரான ஞானபிரகாசம் மரியசீலன் தெரிவித்தார்.

Leave a comment