தனியார் பேருந்து உரிமையாளர்கள் போராட்டம் நிறைவு

232 0

முல்லைத்தீவு மாவட்ட தனியார் பேருந்து உரிமையாளர்கள் முன்னெடுத்த போராட்டம் முதலமைச்சர் அமைச்சின் செயலாளர் விஜயலட்சுமி கேதீஸ்வரன் வழங்கிய உறுதி மொழியை அடுத்து  நிறைவுக்கு வந்ததுள்ளது.

மாலை 4 மணியளவில் முல்லைத்தீவு மாவட்ட செயலகம் முன் போராட்டம் நடத்திய பேருந்து உரிமையாளர்கள் சாரதிகள், நடத்துனர்களை சந்தித்த முதலமைச்சர் அமைச்சின் செயலாளர் விஜயலட்சுமி கேதீஸ்வரன், “உங்களது பிரச்சினைகளை விளங்கி கொண்டுள்ளோம், எமக்கு உடனடியாக தீர்வு தர முடியாது. எனவே எமக்கு இரண்டு வார கால அவகாசம் வழங்கி பொது மக்களின் நலன் கருதி சேவைகளை முன்னெடுக்குமாறும் இரண்டு வாரத்துக்குள் உங்களது பிரச்சினைக்கு தீர்வு வழங்கப்படும்” என உறுதி அளித்ததை தொடர்ந்து போராட்டம் இன்று (17) கைவிடப்பட்டது.

இதனை தொடர்ந்து கருத்து தெரிவித்த, முல்லைத்தீவு மாவட்ட தனியார் பேருந்து உரிமையாளர் சங்க செயலாளர், குறித்த உறுதி மொழிக்கு அமைய போராட்டம் நிறுத்தப்பட்டதாகவும் தமது சேவைகள் நாளை முதல் வழமை போன்று இடம்பெறும் என்றும் தமது போராட்டத்துக்கு ஆதரவு வழங்கிய அனைவருக்கும் நன்றி தெரிவிப்பதாக கூறினார்.

தொடர்ந்து இரண்டு வாரங்களுள் தீர்வு இல்லையேல் உண்ணாவிரத போராட்டம் முன்னெடுக்கப்படும் எனவும் அவர் கூறினார்.

இதேவேளை, போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் வெடி கொளுத்தி ஆரவாரத்தில் ஈடுபட்டதோடு போராட்டத்தை கைவிட்டமை குறிப்பிடத்தக்கது.

Leave a comment