யானைகள் இரண்டையும் இடம் மாற்றும் பணிகள் நிறுத்தம்

260 0

சிங்கராஜா வனத்தில் உள்ள யானைகள் இரண்டையும் அப்பகுதியில் இருந்து வெளியேற்றம் செய்யும் நடவடிக்கை நிறுத்தப்பட்டுள்ளதாக வலுவாதார அபிவிருத்தி, வன ஜீவராசிகள் மற்றும் பிரதேச அபிவிருத்தி பிரதி அமைச்சர் பாலித தெவரப்பெரும தெரிவித்துள்ளார். 

யானைகள் இரண்டையும் அப்பகுதியில் இருந்து வெளியேற்றம் செய்ய வேண்டாம் என ஜனாதிபதி, இன்றும் உத்தரவு பிறப்பித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

சிங்கராஜா வனத்தில் உள்ள யானைகள் இரண்டையும் அப்பகுதியில் இருந்து வெளியேற்றினால், சிங்கராஜா வனம் உலக பாரம்பரிய தளம் எனும் அந்தஸ்த்தை இழந்து விடும் என யுனெஸ்கோ அமைப்பு மின்னஞ்சல் ஊடாக ஏற்கனவே எச்சரிக்கை விடுத்திருந்தது.

இந்நிலையில், வன விலங்குத் திணைக்களத்தின் அதிகாரிகள் நேற்று (16) பெய்த கடும் மழையையும் பொருட்படுத்தாது இரண்டு யானைகளும் அதிகம் வசிக்கும் சைப்பிரஸ் வத்த பகுதியில் தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

இருப்பினும் இன்று காலை ஜனாதிபதியின் பணிப்புரைக்கு அமைய வன விலங்குத் திணைக்களத்தின் அதிகாரிகள் யானைகளை தேடும் பணியை இடைநிறுத்தி உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Leave a comment