இலங்கை தமிழரசு கட்சி விரைவில் புனரமைப்பு-சம்பந்தன்

1254 14

இலங்கை தமிழரசு கட்சியின் புனரமைப்பு விரைவில் நடைபெறும் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க்கட்சி தலைவருமான இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.

முல்லைத்தீவில் நேற்று சனிக்கிழமை தமிழரசுக் கட்சியின் மத்திய செயற்குழு கூட்டத்தில் கலந்து கொண்ட பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு கூறினார்.

கடந்த உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் இலங்கை தமிழரசுக் கட்சியின் வாக்கு வங்கியில் சரிவு நிலை காணப்பட்டது.

இந்நிலையிலேயே கட்சியை புனரமைப்பு செய்வதற்கு தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

Leave a comment