யாழ்ப்பாணம் – கந்தரோடைப் பகுதிக்கான குடிநீர் விநியோகம் நிறுத்தப்பட்டதால் அப்பகுதியில் உள்ள சுமார் 200 குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் குடிப்பதற்கு நீர் இன்றி பெரும் சௌகரியங்களை எதிர் கொண்டு வருகின்றனர்.
குறித்த பகுதியில் வலி.வடக்கில் இருந்து இடம்பெயர்ந்தவர்கள் வாழும் பிள்ளையார் நலன்புரி நிலையத்தில் உள்ள 49 குடும்பங்களும் இதனால் மிக மோசமான பாதிப்புக்களுக்க முகம் கொடுத்து வருகின்றதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உடுவில் பிரதேச அபிவிருத்தி குழுக் கூட்டம் இராஜாங்க அமைச்சர் திருமி விஜயகலா மகேஸ்வரன், பாராளுமன்ற உறுப்பினர்களான தர்மலிங்கம் சித்தாத்தன், அங்கஜன் இராமநாதன் தலமையில் நடைபெற்றது.
இக் கூட்டத்தில் குடிநீர் விநியோகம் தொடர்பான கலந்துரையாடல் நடைபெற்றுக் கொண்டிருந்த வேளை கந்தரோடைப் பகுதியில் உள்ள பிள்ளையார் நலன்புரி நிலையத்தின் தலைவர் எஸ்.சிவஞானத்தினாலேயே மேற்படி விடயம் தொடர்பாக கூட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்:- கந்தரோடை ஜே.199 கிராம சேவகர் பிரிவின் கீழ் வலி.வடக்கு உயர்பாதுகாப்பு வலையத்திற்குள் இருந்து இதுவரை விடுவிக்கப்படாத காங்கேசன்துறை, மயிலிட்டி, தையிட்டிப் பகுதிகளைச் சேர்ந்த 49 குடும்பங்கள் வாழ்கின்றார்கள்.
இங்கு வாழ்பவர்களுடைய காணிகள் இதுவரையில் விடுவிக்கப்படாத காரணத்தினால் அவர்கள் தற்காலிகமாக பிள்ளையார் நலன்புரி நிலையத்திலேயே வசித்து வருகின்றார்கள்.
இங்கு வாழ்பவர்களுக்கான குடிநீர் விநியோகம் தேசிய நீர் வளங்கள் வடிகாலமைப்புச் சபையினூடாக மேற்கொள்ளப்பட்டு வந்தது. இந் நீர் விநியோகத்திற்காக மாதாந்தம் ஒவ்வொரு குடும்பம் 50 ரூபா வீதம் செலுத்துகின்றனர்.
இதே போன்று குறித்த கிராம சேவகர் பிரிவில் உள்ள 200 குடும்பங்களுக்கும் இது போன்று பணத்தினைச் செலுத்தியே குடிநீரினைப் பெற்று வருகின்றார்கள்.
முகாங்களில் வழுகின்ற மக்களுக்கு அங்கு சொந்த காணிகள் இல்லாத காரணத்தினால் அவர்கள் அப் பகுதிகளில் உள்ள காணி உரிமையாளர்களுடைய பெயரிலேயே தமக்காக நீர் விநியோகத்திற்கான பணத்தினையும் செலுத்தி வந்தவர்.
இந்நிலையில் நேற்று முன்தினம் முதல் குறித்த பகுதிக்காக ஒட்டுமொத்த நீர் விநியோகமும் நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் குடிப்பதற்கு நீர் இன்றி நாங்கள் மிகுந்த கஸ்ரங்களுக்கு முனம் கொடுக்கின்றோம்.
நீர் விநியோகத்திற்கான பணத்தினை செலுத்தவில்லை என்ற காரணமும் கூறப்பட்டது. முகாங்களில் வாழுகின்ற நாங்கள் வதிவிடத்தினை உறுதிப்படுத்தும் பத்திரங்கள் இல்லாத காரணத்தினால் நேரடியாக பணத்தினை செலுத்த முடியாத நிலையில் உள்ளோம்.
வுhழ்விடங்களில் இருந்து துரத்தப்பட்ட நாங்கள் இன்று முகாங்களில் தண்ணீர் இல்லாமல் மிகுந்த சஸ்ரங்களுக்கு முகம் கொடுத்து வருகின்றோம் என்று கூறி எமக்காக குடிநீர் விநியோகத்தினை பெற்றுத் தருமாறு கோரியிருந்தார்.
இது தொடர்பாக இராஜாங்க அமைச்சர் திருமதி விஜயகலா மகேஸ்வரன் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் ஆகியோர் கூட்டத்தில் ஆராய்ந்து முதற்கட்டமாக அவர்களுக்கான குடிநீர் விநியோகத்தினை மேற்கொள்ளுமாறும், இது தொடரப்hக உயர் அதிகாரிகளுடன் பேசுவதாகவும் குறிப்பிட்டிருந்தனர்.
ஆசிரியர் தலையங்கம்
-
“அரிசி பொங்கலா? அரசியல் பொங்கலா?”
January 14, 2026 -
குமார் குரல் எப்போதும் குன்றாது!
January 4, 2026 -
ஜேர்மன் ஒற்றுமை தின வரவேற்பு நிகழ்வில் சஜித் பிரேமதாச பங்கேற்பு
October 3, 2025
தமிழர் வரலாறு
-
கேணல் கிட்டு
January 16, 2026 -
கேணல் கிட்டுவின் வீரகாவியம்
January 17, 2025 -
முன்னால் கடல் பின்னால் நிலம்! தளபதி ஜெயம்
December 6, 2024
கட்டுரைகள்
-
அமெரிக்க நடவடிக்கையை வெனிசுலா மக்கள் பலரும் கொண்டாடுவது ஏன்?
January 7, 2026 -
தென்னிலங்கை அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள ரணில்
December 18, 2025
எம்மவர் நிகழ்வுகள்
-
பெப்ரவரி 4 சிறிலங்காவின் சுதந்திர நாள் தமிழினத்தின் கரிநாள்- சுவிஸ்
January 16, 2026 -
எழுச்சிகுயில் 2026 – சுவிஸ்
January 5, 2026 -
பிரான்சில் கேணல் கிட்டு உட்பட 10 வீரமறவர்களின் 33 ஆம் ஆண்டு நினைவேந்தல்!
December 29, 2025 -
மாவீரர் பணிமனை யேர்மனிக்கிளை நாடாத்தும்-கேணல் கிட்டு ஓவியப் போட்டி 2026
December 24, 2025 -
அடிக்கற்கள் எழுச்சி வணக்க நிகழ்வு சுவிஸ் 25.01.2026
December 23, 2025

