உடுவில் மகளீர் கல்லூரி மாணவிகளின் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட்டுள்ளது அச்சமின்றி பாடசாலைக்கு வருமாறு புதிய அதிபர் வேண்டுகோள்

361 0

uduvil-girls-college-300x160உடுவில் மகளீர் கல்லூரி வழமை போன்று மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது என்று அப்பாடசாலையிலன் அதிபர் திருமதி சுமதித்தா ஜெயரட்ணம் தொரிவித்துள்ளார்.
பாடசாலை மாணவர்களின் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட்டுள்ள அதே வேளை எந்த ஒரு பழிவாங்கல் செயற்பாடுகளும் இடம்பெறப் போவதில்லை என்றும் தெரிவித்துள்ள அதிபர் மாணவர்களை அச்சமின்றி பாடசாலைக்கு அனுப்பிவைக்குமாறு பெற்றோர்களை கேட்டுக் கொண்டுள்ளார்.
பாடசாலையின் நிலவரம் தொடர்பாக அவரைத் தொடர்பு கொண்டு கேட்ட போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்:-
பாடசாலையில் சில பிரச்சிணைகள் இடம்பெற்றிருந்தன. ஆனால் அப்பிரச்சினைகள் யாவும் முடிவுக்குக் கொண்டுவரப்பட்டுவிட்டது.
நேற்று முன்தினம் மாலை முதல் பாடசாலையில் முழுமையான பெறுப்பினை ஏற்றுக் கொண்டுவிட்டேன். அனைத்து ஆவணங்களும் என்னிடம்தில் சமர்ப்பிக்கப்பட்டுவிட்டன.
இன்று (நேற்று) முதல் பாடசாலையும் வழமை போன்று இயங்க ஆரம்பித்துவிட்டது. இன்று (நேற்று) மட்டும் 680 மாணவர்கள் பாடசாலைக்கு சமூகம் தந்துள்ளனர்.
இன்று (நேற்று) இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவினரும் பாடசாலைக்கு வருகைதந்து அனைத்து வகுப்புக்களில் நடைபெற்ற பாடங்விதானங்களை பார்வையிட்டுள்ளனர். மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் நிர்வாகத்தினருடைய நடவடிக்கைகளையும் அவர்கள் அவதானித்துள்ளனர்.
எனவே இங்கு மாணவர்களுக்கான அனைத்து பாதுகாப்பு நிலமைகள் காணப்படுகின்றது. பாடசாலையில் மாணவர்களுக்கு எந்த ஒரு பழிவாங்கல் செயற்பாடுகளுக்கும் நாங்கள் இடமளிக்க மாட்டோம். எனவே ஏனைய மாணவர்களையும் பாடசாலைக்கு அனுப்பிவைக்கமாறு பெற்றோரை கோருகின்றேன் என்றார்.