குழந்தைகளை வளர்க்க தந்தைக்கு விடுமுறை அளிக்க இந்தியா மறுப்பு – யுனிசெப் தகவல்

7 0

இந்தியா உள்ளிட்ட 90 நாடுகள் குழந்தைகளை வளர்க்க தந்தைக்கு வழங்கப்பட வேண்டிய சம்பளத்துடன் கூடிய விடுமுறையை வழங்க மறுப்பது யுனிசெப் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.

அரசு அலுவலங்களில் பணியாற்றும் கர்ப்பிணிகளுக்கு பேறுகால விடுமுறை வழங்கப்படுகிறது. இதுபோல குழந்தைகளை வளர்க்க தந்தைக்கும் சம்பளத்துடன் கூடிய விடுமுறை வழங்க வேண்டும். இந்த நிலையில் ஐ.நா. சபையின் குழந்தைகள் வளர்ப்பு தொடர்பான யுனிசெப் அமைப்பு சமீபத்தில் ஆய்வு ஒன்றை நடத்தியது. இதில் இந்தியா உள்பட 90 நாடுகள் புதிதாக பிறந்த குழந்தைகளை வளர்க்க அதன் தந்தைக்கு பேறுகால விடுமுறை வழங்கப்படுவதில்லை என கண்டறிந்துள்ளது.
இதுதொடர்பாக யுனிசெப் அமைப்பு வெளியிட்ட அறிக்கையில் கூறுகையில், உலகில் ஒரு வயதுகூட நிரம்பாத 9 கோடிக்கும் அதிகமாக் குழந்தைகள் உள்ளனர். இவர்களது தந்தைகளுக்கு ஒருநாள் கூட சம்பளத்துடன் கூடிய விடுமுறையை இந்தியா உள்ளிட்ட 90 நாடுகள் வழங்கவில்லை. இந்தியா மற்றும் நைஜீரியா நாடுகளில் அதிகளவு குழந்தைகள் உள்ளனர். இந்த நாடுகள் உள்பட 92 நாடுகளில் குழந்தை வளர்ப்பின் போது தந்தைக்கு விடுமுறை அளிப்பது தொடர்பாக தனியாக தேசிய அளவிலான கொள்கைகள் இல்லை.
இந்தியாவில் அடுத்த நாடாளுமன்ற கூட்டத்தொடரின்போது தந்தைக்கு பேறுகால விடுமுறையாக 3 மாதம் சம்பளத்துடன் கூடிய விடுமுறை அளிப்பதற்கான வரைவு மசோதாவை தாக்கல் செய்ய உள்ளது. குறிப்பாக ஐநா சபை உள்ள அமெரிக்காவிலும் 40 லட்சம் குழந்தைகள் உள்ளன. அங்கும் பேறுகால விடுமுறை அல்லது தந்தைக்கு விடுமுறை வழங்கப்படுவதில்லை. அதே நேரத்தில் அதிக குழந்தைகள் உள்ள பிரேசில் மற்றும் காங்கோவில் தந்தைக்கு பேறுகால விடுறை வழங்குவதற்கான கொள்கை உள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
இது தொடர்பாக யுனிசெப் நிர்வாக இயக்குனர் ஹென்ரிட்டா போர் கூறுகையில், குழந்தை வளர்ப்பு தொடர்பாக தந்தை மற்றும் தாய்க்கு இடையே அர்த்தமுள்ள கலந்துரையாடல் நடத்துவதற்கும், பிறந்த குழந்தைகளின் மூளை வளர்ச்சியடையவதற்கும், குழந்தைகள் மகிழ்ச்சியாக மற்றும் ஆரோக்கியத்துடன் வளர்வதற்கும் இந்த விடுமுறை உதவும், என்றார்.

Related Post

உலகக்கோப்பை வென்ற அதே தினத்தில் பத்ம பூஷண் விருது பெற்ற டோனி

Posted by - April 3, 2018 0
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் டோனிக்கு உலகக்கோப்பை வென்ற அதே தினத்தில் பத்ம பூஷண் விருது வழங்கப்பட்டு கவுரவிக்கப்பட்டுள்ளார். 

சீனா நிலக்கரி சுரங்கத்தில் கேஸ் சிலிண்டர் வெடித்தது- 18 பேர் பலி

Posted by - September 29, 2016 0
சீனாவின் வடக்குப் பகுதியில் சட்ட விரோதமாக செயல்பட்டு வந்த நிலக்கரி சுரங்கத்தில் கேஸ் சிலிண்டர் வெடித்ததில் 18 பேர் பலியாகினர்.வடமேற்கு சீனாவின் ஷிஷுயிஜான் நகரத்தில் சட்டவிரோதமாக செயல்பட்டு…

கத்தார் ஓபன் தொடரின் இறுதி போட்டிக்கு முன்னேறினார் பெட்ரா கிவிடோவா

Posted by - February 18, 2018 0
கத்தார் ஓபன் டென்னிஸ் தொடரின் அரையிறுதி போட்டியில் வெற்றி பெற்ற பெட்ரா கிவிடோவா இறுதிப்போட்டிக்கு முன்னேறினார்.

பாரீஸ் நகரில் குடிபோதையில் 6 பேருக்கு கத்திக்குத்து

Posted by - February 15, 2018 0
பிரான்ஸ் நாட்டின் தலைநகர் பாரீஸ் நகரில், குடிபோதையில் இருந்த நபர் ஒருவர், சாலையில் நின்று கொண்டிருந்தவர்களை சரமாரியாக கத்தியால் குத்திய சம்பவம் நடந்துள்ளது.

தெற்காசியவில் வெள்ளம் – 16 மில்லியனுக்கும் அதிகமானோர் பாதிப்பு

Posted by - August 19, 2017 0
தெற்காசியவில் நிலவும் பருவகால வெள்ளம் காரணமாக 16 மில்லியனுக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தியா, நேபாளம் மற்றும் பங்ளாதேஷ் முதலான நாடுகள் இந்த வெள்ள அனர்த்தத்தை எதிர்நோககியுள்ளன. இதன்…

Leave a comment

Your email address will not be published.