தூத்துக்குடிக்கு நாளை மறுநாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி பயணம்

276 0

துப்பாக்கிச்சூடு நடந்த தூத்துக்குடிக்கு நாளை மறுநாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி செல்ல உள்ளார். அங்கு, பாதிக்கப்பட்ட மக்களை சந்திப்பார் என தெரிகிறது. 

தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டத்தின்போது போலீசார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 13 பேர் கொல்லப்பட்டனர். பலர் காயமடைந்து மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். துப்பாக்கி சூட்டில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரை பல்வேறு தலைவர்கள் நேரில் சந்தித்து ஆறுதல் கூறி வருகின்றனர். மேலும், நிவாரண உதவிகளையும் வழங்கி வருகின்றனர்.

அந்த வரிசையில், முதல்வர் எடபப்டி பழனிசாமி நாளை மறுநாள் தூத்துக்குடி செல்ல உள்ளார். அங்கு, ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டத்தின்போது துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினர் மற்றும் காயமடைந்தவர்களின் குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் தெரிவிப்பார் என்று தெரிகிறது.

துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கடந்த 28-ம் தேதி தூத்துக்குடி சென்று பாதிக்கப்பட்டவர்களை சந்தித்து ஆறுதல் கூறினார். மருத்துவமனையில் சிகிச்சை பெறுவோரையும் சந்தித்தார். அவர் சென்னை திரும்பியதும், ஸ்டெர்லைட் ஆலை நிரந்தரமாக மூடுவது தொடர்பான அரசாணை வெளியிடப்பட்டு, ஆலைக்கு சீல் வைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது

Leave a comment