வடக்கில் படையினரின் எண்ணிக்கை குறைக்கப்படவேண்டும்!

315 0

maxresdefault-9வடக்கில் படையினர் குறைக்கப்படவேண்டுமென்ற கோரிக்கையை தான் ஏற்றுக்கொள்வதாக ஐக்கிய தேசியக் கட்சியின் கம்பகா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும், தேசிய முன்னணி இளைஞர் தலைவருமான காவிந்த ஜெயவர்த்தன தெரிவித்துள்ளார்.

ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய செவ்வியிலேயே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் தெரிவிக்கையில், தேசிய அரசாங்கமானது கடந்த கால காயங்களை ஆற்றி நல்லிணக்கத்தை ஏற்படுத்த முயற்சிக்கின்றது. ஐக்கிய நாடுகள் சபையிலிருந்து எந்த அதிகாரி வந்தாலும் வராவிட்டாலும் மக்களின் அபிலாசைகளை இந்த அரசாங்கம் நிறைவேற்றும்.

வடக்குக் கிழக்கு மக்கள் 30 வருடமாக அங்கிருக்கும் இராணுவத்தினரின் முகத்தையே பகலும் இரவும் பார்த்துக்கொண்டிருக்கின்றனர்.

அரசாங்கத்தைப் பொறுத்தவரையில் வடக்குக் கிழக்கு மக்களின் பிரச்சனையை ஏற்கனவே இனங்கண்டுள்ளனர்.

எனவே சமாதானம் ஏற்ப்டுள்ள நிலையில் அவர்களும் சுதந்திரமாக வாழ வழியேற்படுத்திக்கொடுக்கவேண்டுமெனவும் தெரிவித்துள்ளார்.