சிங்கப்பூரில் கிம்-டிரம்ப் பேச்சுவார்த்தை – பாதுகாப்பு பணியில் கூர்க்கா வீரர்கள்

242 0

சிங்கப்பூரில் வருகிற 12-ந்தேதி அமெரிக்கா – வடகொரியா அதிபர்கள் பேச்சுவார்த்தை நடப்பதால் பாதுகாப்பு பணியை தீவிரமாக கண்காணிக்கும் கூர்க்கா வீரர்கள் பணியில் அமர்த்தப்பட்டுள்ளளனர்.

இந்தியாவில் மேற்கு வங்காளம் மற்றும் அதை ஒட்டி உள்ள பகுதிகளில் கூர்க்கா இன மக்கள் வசித்து வருகிறார்கள். இவர்கள் பெரும்பாலும் நாடு முழுவதும் சென்று காவலாளி பணிகளையே செய்வது வழக்கம்.

மேலும் இந்திய ராணுவத்திலும் கூர்க்கா படை என்ற தனிப்பிரிவு செயல்படுகிறது. அவர்கள் காவல் பணிகளில் மிகவும் திறமையாக இருப்பதால் அவர்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து இந்த பணிகளை செய்ய வைக்கின்றனர்.

இதேபோல சிங்கப்பூரிலும் கூர்க்கா வீரர்களுக்கு முக்கியமான பணிகள் வழங்கப்பட்டு வருகின்றன. சிங்கப்பூரில் இந்தியர்கள் குடியேறியபோது அங்கு பாதுகாப்பு பணிகளுக்காக கூர்க்கா வீரர்களும் அழைத்து செல்லப்பட்டார்கள்.

அவ்வாறு சென்றவர்கள் பல்லாயிரக்கணக்கானோர் வசித்து வருகின்றனர். அவர்களுக்கு மவுண்ட் வெர்னான் என்ற இடத்தில் தனி குடியிருப்பு பகுதி உள்ளது. இந்த குடியிருப்புக்கு மற்றவர்களை அனுமதிப்பது இல்லை.

கூர்க்கா வீரர்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து சிங்கப்பூர் போலீசில் வேலை வாய்ப்பு கொடுக்கப்படுகிறது. தற்போது 1800 கூர்க்கா வீரர்கள் சிங்கப்பூர் போலீசில் பணியாற்றி வருகிறார்கள்.

வருகிற 12-ந்தேதி சிங்கப்பூரில் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்பு, வடகொரி அதிபர் கிம்ஜாங் அன் ஆகியோரிடையே வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த பேச்சுவார்த்தை நடைபெறுகிறது.

இரு நாடுகளும் நீண்டகாலமாக கடுமையான எதிரி நாடுகளாக இருந்து வந்த நிலையில் இப்போது பேச்சுவார்த்தை நடைபெற உள்ளது. எனவே அங்கு அசம்பாவித சம்பவங்கள் எதுவும் நடந்து விடக்கூடாது என்பதற்காக சிங்கப்பூர் அரசு விழிப்புடன் செயல்பட்டு வருகிறது.

டொனால்டு டிரம்ப்-கிம் ஜாங் அன் பேச்சுவார்த்தை சிங்கப்பூரில் உள்ள சாங்கிரி லா ஓட்டலில் நடைபெற உள்ளது. இந்த ஓட்டலில் பாதுகாப்பு பணியை கூர்க்கா வீரர்களிடம் ஒப்படைக்க சிங்கப்பூர் அரசு முடிவு செய்துள்ளது.

கூர்க்கா வீரர்கள் மிகவும் விழிப்புடன் இருந்து கண்காணிப்பார்கள் என்பதால் அவர்களை இந்த பணிகளில் அமர்த்த இருப்பதாக தெரியவந்துள்ளது.

Leave a comment