யாழ் உரும்பிராயில் பட்டப்பகலில் துணிகரக் கொள்ளை!

447 0

யாழ்ப்பாணம் உரும்பிராய் சந்திக்கு அருகாமையிலுள்ள கட்டிடப் பொருட்கள் விற்பனை நிலையமொன்றில் இன்று  முற்பகல் 11:50 மணியளவில் கொள்ளைச் சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. இன்று முற்பகல் வேளையில் கடைக்கு வந்த இனம் தெரியாத நபர் கடைக்காரர் வெளியே சென்றிருந்த சமயம் கடைக்குள் நுழைந்து பெரும் தொகையான பணத்தை கொள்ளையடித்துச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கடைக்காரர் கடைக்கு வெளிப்புறமாக சென்றிருந்த வேளையில்  கடைக்குள் நுழைந்து கொள்ளையடித்து தப்பிச் சென்றுள்ளார்.. கடைக்காரர் மீண்டும் திரும்பி வந்த பார்த்த போதே குறித்த பணம் சாதுரியமான முறையில் களவாடிப்பட்டுள்ளமை கண்டுபிடிக்கப்பட்டது.

எனினும், கடைக்குள் இருந்த சிசிரீவி கமரா மூலம் குறித்த கொள்ளையர்களை இனம் காண முடியுமென தெரிவிக்கப்படுகின்றது. அண்மைக்காலமாக யாழ் மாவட்டத்தில் இவ்வாறான திருட்டுக்கள் அதிகரித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Leave a comment