முல்லைத்தீவில் சிக்கிய இரு பெண்கள் உள்ளிட்ட நால்வர்

368 0

முல்லைத்தீவு பகுதியில் மோட்டார் சைக்கிள்களைத் திருடி வந்த இரு பெண்கள் உள்ளிட்ட நான்கு பேரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

முல்லைத்தீவு நகர் பகுதியில் அண்மைக்காலமாக மோட்டர் சைக்கிள்கள் திருடப்பட்டு வருவதாக பொலிஸ் நிலையத்தில் பல முறைப்பாடுகள் பதியப்பட்டிருந்தன.

இதற்கமைய குற்றத்தடுப்பு பொலிஸார் நேற்று நடத்திய சோதனை நடவடிக்கையின் போது கரைச்சி குடியிருப்பு பகுதியில் வைத்து சந்தேக நபர் ஒருவரையும் மோட்டார் சைக்கிள் ஒன்றினையும் கைப்பற்றினர்.

இதன்போது கைதாகிய சந்தேக நபரிடம் விசாரணை மேற்கொண்ட போது பாரிய கொள்ளைச் சம்பவங்களில் திருட்டு கும்பல் ஒன்று செயற்பட்டு வருவது தெரியவந்துள்ளது.

இதனடிப்படையில் பொலிஸ் அணியினர் தீவிர விசாரணைகளை முன்னெடுத்த போது முல்லைத்தீவு, கள்ளப்பாடு பகுதியில் அமைந்துள்ள வீடொன்றில் மோட்டார் சைக்கிள்களின் பாகங்கள் மற்றும் இலக்கத்தகடுகளுடன் இரு பெண்கள் உள்ளிட்ட மூவர் கைதாகினர்.

 இந்நிலையில் திருட்டில் ஈடுபட்டு வரும் கும்பல் தொடர்பில் தொடர்ந்தும் விசாரணைகள் முன்னெடுத்து வருவதாக முல்லைத்தீவு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Leave a comment