வலி வடக்கில் 700 ஏக்கர் காணிகள் விடுவிக்கப்படவுள்ளன

387 0

free-land-1மீள்குடியேற்ற  அமைச்சினால்,  வலிகாமம்  வடக்கு  மக்களின்  காணிகளை விடுவிப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக யாழ்ப்பாண மாவட்ட செயலர் தெரிவித்துள்ளார்.

இதனடிப்படையில்,  வலி. வடக்கில் 700 ஏக்கர் காணிகள் இம் மாத இறுதிக்குள் விடுவிக்கப்படவுள்ளதாக, யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் நாகலிங்கம்  வேதநாயகன் இன்று தெரிவித்தார்.

வலி. வடக்கில் காங்கேசன்துறை வடக்கு, தையிட்டி கிழக்கு உள்ளிட்ட பல பகுதிகள் இவ்வாறு விடுவிக்கப்படவுள்ளன.

இதன்படி, தெல்லிப்பளை பிரதேச செயலாளரினால் குறித்த காணிகளை கையளிப்பதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

அதன் பிரகாரம்,  ஜனாதிபதியின் பணிப்புரைக்கு அமைவாக இந்தப் பகுதிகளில் மீள்குடியேற்றம் செய்யப்படவுள்ளதாகவும், இவ்வாறு  படிப்படியாக வலி.வடக்கில் இருந்து இடம்பெயர்ந்த மக்களின் காணிகள் கையளிப்பதற்கான  நடவடிக்கைகளை மீள்குடியேற்ற அமைச்சு மேற்கொண்டு வருவதாகவும் அரசாங்க அதிபர் மேலும் கூறினார்.